பெயர்தான் "விர்ஜின்".. ஆனால் நடப்பதெல்லாம் "ஆ" ரக சேட்டைகள்!
சஸ்செக்ஸ், இங்கிலாந்து: விர்ஜின் அட்லான்டிக் நிறுவன விமானங்களில் நடைபெறும் அட்டகாசங்கள், ஆ ரக சம்பவங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் அதில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான 41 வயது மாண்டி ஸ்மித்.
கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக விர்ஜின் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஸ்மித். தற்போது அவர் கேபின் பீவர் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் ஓடும் விமானத்தில் என்னவெல்லாம் அக்கப்போர் நடக்கிறது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் ஸ்மித்.
பல்வேறு பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் பணத்தைக் காட்டி தனக்கு ஆசை வலை விரித்து அடைய முயற்சித்ததாக அதில் அவர் கூறியுள்ளார். அதேசமயம், தானும் பலமுறை ஓடும் விமானத்தில் ஜல்சாவில் ஈடுபட்டதாகவும் தயக்கமின்றி தெரிவித்துள்ளார்.
தற்போது தனது கணவர் கிளன் மற்றும் மகளுடன் மேற்கு சஸ்சக்ஸ் நகரில் வசித்து வருகிறார் ஸ்மித்.

மாண்டி ஸ்மித்
விர்ஜின் ஏர்ஹோஸ்டஸ்ஸாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மாண்டி ஸ்மித், தனது பணிக்காலத்தின்போது சந்தித்தவை குறித்து இந்த நூலில் விலாவாரியாக எழுதியுள்ளார். இந்த நூல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பலானது வானத்து மேலே
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓடும் விமானத்தில் நடப்பது கீழே பெரும்பாலும் தெரிவதில்லை. மது விருந்துகள், பெண்களுடன் கும்மாளம், ஆகியவை இதில் முக்கியமாக இடம் பெறுகின்றன. செக்ஸ் மிக மிக சாதாரணமாக நடக்கிறது.

சட்டைக்குள் கைவிட்ட பயணி
விமான ஊழியர்களுக்கு பயணிகளிடமிருந்து வரும் சங்கடங்களை பெரும் பட்டியலாக சொல்லலாம். ஒருமுறை மேலே உள்ள பெட்டியில் உள்ளதை எடுக்க நான் முயன்றபோது கீழே சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி எனது சட்டை வழியாக உள்ளே கை விட்டு நோண்டினார்.

சுய இன்ப வெறியர்கள்
விமானத்தில் பயணிகள் தூங்க ஆரம்பித்ததும் விளக்குகளின் பிரகாசம் குறைக்கப்படும். அப்போது சில பயணிகள் சுய இன்பத்தில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.

அரை நிர்வாண ஓட்டம்
ஒருமுறை ஒரு ஜோடி அரை நிர்வாணாக திடீரென எழுந்து ஓடியதைப் பார்த்துள்ளேன். இதெல்லாம் சின்ன உதாரணங்கள். இதுபோல நிறைய நடக்கும்.

லூட்டிகளில் பிரீமியம் நம்பர் ஒன்
பிரீமியம் எக்கானமி வகுப்பு பயணிகள் மற்ற பயணிகளை விட அதிகம் லூட்டியடிப்பார்கள். காரணம், மற்றவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பது அவர்களது எண்ணம்.

பீட்சாவை வீசிய பிசினஸ்மேன்
ஒருமுறை ஒரு நபர் என் முகத்தில் பீட்சாவை வீசியடித்தார். அவரது மகன் அதை சாப்பிட விரும்பவில்லை என்று கூறி பீட்சாவை என் முகத்தில் தூக்கிப் போட்டு விட்டார்.

கடலை பார்ட்டிக்கு வந்த சோதனை
ஒரு முறை ஒரு தொழிலதிபர் அப்பர் கிளாஸில் பயணித்தார். அப்போது தனது அருகே அமர்ந்திருந்த பெண் பயணியுடன் நீண்ட நேரம் கடலை போட்டபடி வந்தார். அந்த சமயத்தில் அந்த நபருக்குப் பின்னால் இருந்த ஒரு பெண் எழுந்து வந்து அந்த நபரைப் பார்த்தபோது அவர் ஷாக்காகி விட்டார். காரணம், பின்னால் இருந்த பெண் அவரது மனைவியாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிவிக்காமல், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

துபாயில் விடிய விடிய விமானத்தில்
துபாயில் இருந்தபோது ஒரு பெரும் கோடீஸ்வரருடன் விடிய விடிய விமானத்தில் பறந்தபடி சந்தோஷித்தேன். அவ் பெரிய கோடீஸ்வரர் ஆவார். பெர்சிய வளைகுடாவை நாங்கள் விமானத்தில் பறந்தபடி கழித்தோம். இரவு முழுவதும் இந்த லூட்டி நீடித்தது.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
அவரது பெயர் மிஹிர் அஸ்கர். தனது சொந்த விமானத்தில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். எனக்கு அது, நான் அனுபவித்த பல இன்ப இரவுகளில் ஒன்றாக அமைந்தது.

ஊருக்கு ஒரு ஆள்
நான் உலகின் பல நாடுகளிலும் விமானத்தில் பறந்தபடி உல்லாசமாக இருந்துள்ளேன். கரீபியா முதல் தென் ஆப்பிரிக்கா வரை ஊர் ஊருக்கு ஆள் இருந்தார்கள் எனக்கு.

பார்படாஸ் ஆண்கள்.. செம ஹாட்!
எனக்குப் பிடித்த இடம் பார்படாஸ்தான். இங்குள்ள ஆண்கள் செம ஹாட். ஒரு முறை அங்கு இரவில் நடந்த மது விருந்தின்போது ரக்பி அணியினருடன் இணைந்து கும்மாளம் போட்டோம். நாங்கள் அடித்த கும்மாளத்தில் பெரிய டேபிளே உடைந்து போய் விட்டது.

சூட்கேஸா.. இல்லை செக்ஸ் ஷாப்பா
எனது சூட்கேஸ் எப்போதுமே ஒரு செக்ஸ் ஷாப் போலத்தான் இருக்கும். அவ்வளவு ஐட்டங்கள் அதில் நிரம்பியிருக்கும்.

பிரான்சன் வைத்த விருந்து
ஒருமுறை விர்ஜின் நிறுவன அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் வைத்த மது விருந்தில் கலந்து கொண்டேன். விருந்துக்குப் போன என்னை பிரான்சனே கைப்பிடித்து அழைத்து வரவேற்றார். அங்கிருந்த அத்தனை பேரும் சாம்பெய்ன் மது விருந்தில் குளித்தனர்.. ஆம், அனைவரின் தலையிலும் மதுவை ஊற்றி விளையாடினார் பிரான்சன்.

ஜோனதன் மடியில்
அப்போது எனக்கு ஜோனதன் என்ற பைலட் பாய் பிரண்டாக இருந்தார். அவரும் நானும் ஒருமுறை செஸ்னா விமானத்தில் பறந்தோம். அப்போது திடீரென எழுந்த நான் அவரது மடியில் போய் அமர்ந்தேன். பிறகென்ன உறவுதான்...! இருவரும் இணைந்து களித்தோம். ஆனால் ஜோனதனுடன் எனது உறவு நீடிக்கவில்லை. அவர் எனக்காக கமிட் செய்ய விரும்பவில்லை. எனக்கோ ஆண்களுக்குப் பஞ்சமில்லை. எனவே எளிதாக பிரிந்து விட்டோம்.

பைத்தியக்கார கோடீஸ்வரர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய இளம் கோடீஸ்வரர் என் மீது பைத்தியமாக இருந்தார். அவர் பிரபலமான விளையாட்டு அணியை வைத்திருந்தார். அடிக்கடி என்னைப் பார்க்க ஓடி வருவார். ஆனால் அவர் பிரபலமானவர் என்பதால் வெளியில் அலைந்ததில்லை. ஆனால் அறைக்குள் மூச்சு முட்ட முட்ட விளையாடியுள்ளோம்.

விமான நிலையத்தில் பார்த்து ரூம் எடுத்து
வேகாஸ் செல்லும் வழியில் கேட்விக் விமான நிலையத்தில் ஒரு டாக்டரைப் பார்த்தேன். இவர்தான் எனது கணவர் என்ற முடிவுக்கும் வந்தேன். அவருக்கும் என்னைப் பிடித்து விட்டது. இருவரும் அறை எடுத்தோம். விடிய விடிய திளைத்தோம். காலையில் எழுந்து பார்த்தால் பார்ட்டி எஸ் ஆகியிருந்தார்.! நான் உடைந்து போனேன்.

கணவர்தான் சொர்க்கம்.. இப்போ
எனது கணவர் கிளன் கிடைக்கும் வரை எனது வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அதெல்லாம் நீர்க்குமிழி போல என்பதை கிளனைப் பார்த்த பிறகுதான் உணர்ந்தேன். இப்போது எனது கணவர் மற்றும் மகளுடன் அர்த்தப்பூர்பவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.. இது சந்தோஷமாக இருக்கிறது.. உண்மையான சந்தோஷமாக என்று கூறியுள்ளார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications