ஜன்னல் பக்கம் மறந்தும் எட்டி பார்த்துடாதீங்க.. ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவருக்கு சிஐஏ எச்சரிக்கை
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட முயன்ற வாக்னர் குழுவின் தலைவர் திறந்தவெளியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க உளவு துறையின் முன்னாள் இயக்குநர் எச்சரித்துள்ளார்.
ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா 'நேட்டோ' அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.
இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்த படையெடுப்பு நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னமும் போரின் வீரியம் குறையவில்லை. இதில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருப்பது வாக்னர் எனப்படும் கூலிப்படைதான். வெளிநாடுகள் இந்த தாக்குதலை போர் என்று கூறினாலும், ரஷ்யாவை பொறுத்த அளவில் இது வெறும் ராணுவ நடவடிக்கைதான். எனவே ரஷ்ய ராணுவத்தின் முக்கிய புள்ளிகள் இதில் களம் இறங்காமல், வாக்னர் போன்ற கூலிப்படைகளை கொண்டே ரஷ்யா உக்ரைனை கைப்பற்றி வருகிறது.
இந்த போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறது. தற்போதைய சூழலில் உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷ்யா வசம் இருக்க வாக்னர் குழுதான் காரணம். இதை அந்த குழுவே பெருமையாக கூறி வருகிறது. ஆனால் இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்நிலையில் தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது.
எனவே ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவும், அதிபர் புதினுக்கு எதிராகவும் போரை அறிவித்தது. இது ரஷ்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ரஷ்யாவில் தனியார் ராணுவம் எனப்படும் கூலிப்படைகளுக்கு சட்ட ரீதியாக எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் வாக்னர் குழுவின் கதையே வேறு. இவர்களின் முன்னாள் தலைவர்கள் புதினுடன் நெருக்கமாக இருந்தவர்கள். எனவே இந்த நட்பு காரணமாக வாக்னர் குழுவை புதின் கண்டும் காணாமல் இருந்தார்.
ஆனால், தான் ஊட்டி வளர்த்த கூலிப்படை தனக்கு எதிராக திரும்பியதால் அதிர்ந்துபோன புதின், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்துபவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று கூறினார். இப்படியாக இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்த நிலையில், பெலாரஸ் அதிபர் வாக்னர் கூலிப்படையுடன் ரஷ்யா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் கலகத்தை கைவிடுவதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்தார்.
இத்துடன் இவர் ரஷ்யாவை விட்டும் வெளியேறினார். இந்நிலையில், அமெரிக்க உளவு துறையான சிஐஏவின் முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸ், "புதின் தனது ஆட்சி காலத்தில் இதற்கு முன்னர் இப்படியான நெருக்கடியை அவர் சந்தித்ததில்லை. எனவே, அவர் இப்போது எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம்.
அதேபோல எவ்ஜெனி பிரிகோஜினை பொறுத்த அளவில் அவர் திறந்த ஜன்னல்கள் கொண்ட அறையில் இருக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது எவ்ஜெனி பிரிகோஜின் தனது உயிரை காப்பாற்றிக்கொண்டாலும், அவர் தனது படையை ஏறத்தாழ இழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே எவ்ஜெனி பிரிகோஜினை கண்டதும் சுட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications