வெள்ளை இன ஆண்கள் கஷ்டப்படுகிறார்கள்.. கூகுள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் ஊழியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இணைய உலகின் தலை யாரென்றால் எதிலும் சர்ச் செய்யாமல் எளிதாக கூகுள் என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு கூகுள் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் கூகுள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து இருக்கிறது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஜேம்ஸ் டமோர் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வெள்ளையின ஆண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக அவர் தனது வழக்கில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கூகுள் இன்னும் சில மோசமான புகார்களையும் சந்தித்து இருக்கிறது.

எப்படி தொடங்கியது

எப்படி தொடங்கியது

சென்ற வருடம் தான் கூகுளின் இந்த பிரச்சனை தொடங்கியது. ஜேம்ஸ் டமோர் அப்போது கூகுளில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். பெண்களுக்கு போதிய உடல் வாகு இல்லாத காரணத்தால் கூகுளில் அவர்கள் குறைவாக நியமிக்கப்படுகிறார்கள் என்று ஜேம்ஸ் டமோர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இது பெரிய பிரச்சனை ஆனது.

பெண்கள்

பெண்கள்

கூகுளில் பெண்கள் குறைவாக வேலைக்கு சேர்க்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து இருந்ததால் இவர் இப்படி கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். இது முதலில் அலுவலகத்திற்குள் மட்டுமே பரவியது. பின் யாரோ இதை இணையம் முழுக்க வெளியிட்டனர். இதையடுத்து ஜேம்ஸ் டமோர் கூகுள் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

வழக்கு தொடுத்தனர்

வழக்கு தொடுத்தனர்

இந்த நிலையில் கூகுளில் பெண்களுக்கு சரியான சம்பளம் இல்லை, சரியாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வந்தது. 4 முன்னாள் பெண் கூகுள் ஊழியர்கள் சேர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தனர். கூகுள் பெண்களை அவமதிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

மீண்டும் வழக்கு

மீண்டும் வழக்கு

தற்போது ஜேம்ஸ் டமோர் கூகுள் மீது வழக்கு தொடுத்து இருக்கிறார். கூகுளில் இருக்கும் வெள்ளையின ஆண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஊழியர்களின் கருத்துக்கு மதிப்பே இல்லை என்றுள்ளார். வித்தியாசமான கருத்து கொண்டவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former employee James Damore sued Google for discriminating white working men. James Damore fired from google an year ago for his article on working woman in google.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X