அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்சி மரணம்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் மனைவியான நான்சி ரீகன் கலிபோர்னியாவில் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 94.
அமெரிக்காவின் 40 ஆவது அதிபராக 1981 முதல் 89 வரை இருந்தவர் ரொனால்ட் ரீகன். அவரது மனைவி நான்சி.
அவர், சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லறை அருகே:
கடந்த 2004 ஆம் ஆண்டு மரணமடைந்த ரொனால்ட் ரீகனின் கல்லறை அமைந்திருக்கும் சிமி வேல்லியில் உள்ள ரொனால்ட் ரீகன் நூலக வளாகத்தில் நான்சியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

நடிகை
ரீகன் முன்னாள் ஹாலிவுட் நடிகர் ஆவார். அதேபோல, நான்சியும் 1950-60களில் நான்சி டேவிஸ் என்ற பெயரில் சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பால் மரணம்:
மராடைப்பு காரணமாக நான்சி உயிரிழந்ததாக அவரது உதவியாளர் அல்லிஸன் பேரியோ, அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ரோனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக கடந்த 1981இல் பதவியேற்றார். அவர் பதவியில் இருந்த எட்டு ஆண்டுகளிலும், நான்சிதான் திரைமறைவில் இருந்து இயக்கி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கணவர் மறைவிற்கு பின்:
தனது கணவரின் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் நான்சி மீது புகார் கூறப்பட்டது. கடந்த 1994ஆம் ஆண்டில் "அல்செய்மர்" என்ற மறதி நோயால் ரீகன் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் இறந்த 2004 ஆம் ஆண்டு வரை நான்சி கவனித்துக் கொண்டார். ரீகனின் மறைவுக்குப் பிறகு அவரது சொந்த மாகாணமான கலிபோர்னியாவுக்கு நான்சி சென்றுவிட்டார்.

அல்செய்மர் சிகிச்சைகள்:
அங்கு நலிவடைந்த மக்களுக்காகப் பணியாற்றி வந்தார். "அல்செய்மர்" மறதி நோயால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சை முறைகளுக்கான ஆராய்ச்சிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக நான்ஸி போராடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications