ஆன்லைனில் வேலை தேடும் முன்னாள் கிரேக்க அமைச்சர்
ஏதென்ஸ்: முன்னாள் கிரேக்க உள்துறை அமைச்சர் தற்போது இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆர்கைரிஸ் டினோபாலஸ். அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர். கிரீஸ் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது 13 ஆண்டுகளாக அரசியலில் இருந்தவர், 15 ஆண்டுகளாக சர்வதேச பத்திரிக்கையாளராக இருந்தவர், வழக்கறிஞர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர், அருமையாக பேசக் கூடியவர், பிரச்சனைகளை தீர்க்கும் வல்லவர், முக்கிய முடிவுகளை எளிதில் எடுப்பவர் என்று பெயர் வாங்கிய டினோபாலஸ் வேலை தேடி தனது சி.வி.யை devnetjobs.org என்ற இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார்.

முதலில் டினோபாலஸின் சி.வி.யை பார்த்த கிரேக்க ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் என பலரும் யாரோ இணையதளத்தில் விளையாடியுள்ளதாக நினைத்தனர். இல்லை இல்லை யாரும் விளையாடவில்லை நான் நிஜமாகவே வேலை தேடுகிறேன் என்று டினோபாலஸ் ட்விட்டரில் தெரிவித்த பிறகே மக்களுக்கு உண்மை தெரிய வந்தது.
டினோபாலஸ் 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர். முன்னதாக 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை வடக்கு ஏதென்ஸில் உள்ள புறநகர் பகுதிக்கு மேயராக இருந்துள்ளார்.
டினோபாலஸுடன் கேபினட் அமைச்சராக இருந்த அடோனிஸ் ஜார்ஜியாடிஸ் வேலை தேடும் தனது சகாவை பாராட்டியுள்ளார். ஒரு முன்னாள் அமைச்சர் வேலை தேடுவது ஆச்சரியமாக உள்ளது என்று கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications