கண்ட இடத்தில் தட்டுவார்... கை வைப்பார் - ஹார்வி வெயின்ஸ்டின் மீது பெண் உதவியாளர் புகார்

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் மீது அவரது அந்தரங்க உதவியாளாராக வேலை செய்த இந்திய வம்சாவளி பெண் சந்தீப் ராஹல் என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உடம்பில் கண்ட இடத்தில் கை வைப்பார், அறையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்து மன உளைச்சலை ஏற்படுத்துவார் என ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் மீது மாஜி பெண் உதவியாளர் சந்தீப் ராஹல் என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின்,65. துலிப் பீவர், கேங்ஸ் ஆப் நியூயார்க், மலினா உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தனது படங்களில் நடித்த நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது.
மன்மத ராசாவாக வலம் வந்த இவர் தனது படத்தில் நடித்த பல நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தற்போது கூறிவருகின்றனர்.

ஹார்வியின் பாலியல் தொல்லைகள்

ஹார்வியின் பாலியல் தொல்லைகள்

சமீபத்தில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், மாடலுமான நடாசியா, ஒரு விழாவிற்கு சென்று பார்ட்டில் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டதாகவும், அப்போது அவரின் அறைக்கு வந்த ஹார்வி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

வீடு புகுந்து பலாத்காரம்

வீடு புகுந்து பலாத்காரம்

பிரபல நடிகை அன்னபெல்லா சியோராவும் வெயின்ஸ்டின் மீது புகார் அளித்துள்ளார். 1992ம் ஆண்டு வெயின்ஸ்டின் எனது வீட்டிற்கு வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரால் மூன்று வருடங்கள் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன் என்று புகார் கூறினார்.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான சந்தீப் ராஹலும் சேர்ந்துள்ளார். இவர் கடந்த 2013 முதல் 2015 வரை ஹார்வியிடம் அந்தரங்க உதவியாளராக வேலை செய்தபோது, தன்னை தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்

ஹார்வியின் அலுவலகத்தில் பாலியல் தொல்லை எல்லா மட்டத்திலும் இருக்கும். நான் அவருடைய அந்தரங்க உதவியாளராக பணியாற்றினேன். அப்போது என்னிடம் அவர் தினமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவார். எனது உடம்பை பல இடங்களில் தொடுவார் என்றும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பட்டியல்

பெண்களின் பட்டியல்

அவருடன் பாலியல் தொடர்பு வைத்துள்ள பெண்களின் பட்டியலை பராமரிக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்து, மனஉளைச்சலை ஏற்படுத்தினார். விரைப்புதன்மைக்காக அவர் பயன்படுத்தும் ஊசிகளை அலுவலகம், அவர் குடியிருக்கும் அடுக்குமாடி வீடு, ஓட்டல் அறைகளில் ஆங்காங்கு வீசி விட்டு அதை அப்புறப்படுத்தும்படி கூறுவார்.

நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

அவர் தனது இ-மெயில் தகவல்களை என்னிடம் சொல்லி டைப் செய்யும்போது, நிர்வாணமாக இருப்பார். காரில் அவருடன் செல்லும்போது எனது பின்புறம், தொடை உள்ளிட்ட பல இடங்களில் தொட்டு துன்புறுத்துவார் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவுக்கு 21 நாட்களில் பதில் அளிக்கும்படி ஹார்விக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹாலிவுட்டில் அதிர்ச்சி

ஹாலிவுட்டில் அதிர்ச்சி

அதே நேரத்தில் ராஹலின் குற்றச்சாட்டுகளை ஹார்வி மறுத்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் மீது பாலியல் புகார்கள் வரிசை கட்டி வருகின்றன. இன்னும் எத்தனை பேர் புகார் கூறி வழக்குத் தொடரப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+