5 வயது மகள் முன்பு முன்னாள் வெனிசுலா அழகி, மாஜி கணவர் சுட்டுக் கொலை

முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர்(29). அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவரது முன்னாள் கணவர் தாமஸ் ஹென்ரி பெர்ரி(39). அவர்களுக்கு மாயா பெர்ரி ஸ்பியர்(5) என்ற மகள் உள்ளார். அமெரிக்காவில் வசித்து வந்த மோனிகா தனது முன்னாள் கணவர் மற்றும் மகளுடன் வெனிசுலாவுக்கு சுற்றுலா சென்றார்.
கடந்த திங்கட்கிழமை அன்று அவர்கள் 3 பேரும் மத்திய வெனிசுலாவில் உள்ள பியூர்டோ காபெல்லா மற்றும் வாலன்சியாவுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கார் டயர் கூரான பொருள் மீது பட்டு பழுதாகி நின்றது. அந்த சமயத்தில் கொள்ளையர்கள் வந்து மோனிகா மற்றும் பெர்ரியை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மாயாவின் காலில் குண்டடிபட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாயாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் வேண்டும் என்றே கூரான பொருளை வைத்து காரை பழுதடையச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெனிசுலாவில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மோனிகா கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications