சிங்கப்பூரில் முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு வரவேற்பு
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாய்சபையின் தேசிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜமால் முஹம்மது கல்லூரியின் பிரசித்திப் பெற்ற முன்னாள் மாணவருமாகிய அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு, சிங்கப்பூரில் வரவேற்பு நிகழ்ச்சியொன்றை மிகச்சிறப்பாக நடத்தியது.

"சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் உருவாக வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் அண்ணன் அப்துல் ரஹ்மான்" என்று தனது வரவேற்புரையில் புகழாரம் சூட்டினார், சங்கத்தின் தலைவர் முனைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்.
"சமுதாய வளர்ச்சிக்கும், ஒன்றுபட்ட சமூகமாகத் திகழ்வதற்கும் நம் வாழ்வின் பெரும்பகுதியை தொடர்ந்து அர்ப்பணிக்க அனைவரும் முன்வர வேண்டும்" என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டார் அப்துல் ரஹ்மான்.
ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியின் தாளாளரும், மாநில கல்விப்பணி செயலாளருமாகிய ஷாஜஹான், மாநில துணைச் செயலாளரும் அய்யம்பேட்டை ஜம்ஜம் நிர்வாக இயக்குநருமாகிய மில்லத் இஸ்மாயில் ஆகியோரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் கலந்தர் மொஹிதீன், பொருளாளர் ஹபீபுல்லா, துணைச் செயலாளர் ஹாஜா செய்க் அலாவுதீன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான கணிதப் பேராசிரியர் அமானுல்லா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் தமீம் தீன், எழுத்தாளர் ஷா நவாஸ், யுனைடெட் வேர்ல்ட் ஹலால் டெவலப்மென்ட் நிறுவனத்தின் தலைவர் முஹம்மது ஜின்னா, தொழிலதிபர் ஹமீது கவுஸ், சிங்கப்பூர் நாகூர் சங்கத்தின் செயலாளர் முஹம்மது கவுஸ், சிங்கப்பூர் பொதக்குடி சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் மாலிக், சிங்கப்பூர் காயல்பட்டின நல அபிவிருத்தி சங்கத்தின் மதியுரைஞர் பாளையம் முஹம்மது ஹசன், பிளாக்ஸ்டோன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் ஆரிஃப் உள்ளிட்ட பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications