பாகிஸ்தானுக்கு வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது.. அரசுக்கு எதிராகவே போராடும் முன்னாள் ராணுவ கேப்டன்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஒரு காலத்தில் பாகிஸ்தான் ராணுவ கேப்டனாக இருந்து, தலிபான்களுக்கு எதிராக போரிட்டவர் இப்போது அதே நாட்டுக்கு எதிரான கிளர்ச்சி படைக்கு தலைமை தாங்குகிறார். பாகிஸ்தானை எதிர்த்து போராடும் பலூச் விடுதலை ராணுவத்தின் புதிய தலைவராக ரஹ்மான் குல் நியமிக்கப்பட்டுள்ளார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பது போல ரஹ்மான் கில் தனக்கு எதிராகவே திரும்பியதால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் இருக்கிறது.

எங்களுக்கு தனி நாடு தேவை.. நாங்கள் பாகிஸ்தான் இல்லை என்று சொல்லி பல ஆண்டுகளாகவே கிளர்ச்சி செய்து வருபவர்கள் பலூச் படைகள். பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை. சமீப காலமாகவே இவர்களின் தாக்குதல்கள் பாகிஸ்தானில் தீவிரமடைந்து வருகிறது.

Balochistan rebels

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது

இந்த சூழலில் தான் பலூச் கிளர்ச்சி படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக திய தலைவராக ரஹ்மான் குல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாக இருந்தவர். முரீத் என்றும் அழைக்கப்படும் இந்த ரஹ்மான் குல், கடந்த சனிக்கிழமை பலூச் ராணுவத்தின் புதிய தளபதியாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்பு அந்த அமைப்பின் தற்கொலை படை பிரிவான மஜீத் பிரிகேடுக்கு அவர் தலைமை வகித்தார். சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தை விட்டு வெளியேறிய அவர், இப்போது அந்த நாட்டுக்கு எதிரான ஆயுத போராட்டத்தை வழிநடத்துகிறார்.

ரஹ்மான் குல்

1984 ஆகஸ்ட் மாதம் பிறந்த ரஹ்மான் குல், 2002ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் சுமார் எட்டு ஆண்டுகள் பாகிஸ்தானின் பிரண்டியர் ஃபோர்ஸ் ரெஜிமென்ட்டில் பணியாற்றினார். இப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஆசிம் முனீரும் இதே ரெஜிமென்ட்டில் தான் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பகுதிகளில் டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் குல் பங்கேற்றார். 2010ல் ராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி பகுதியிலும் பணியாற்றினார். அதே 2010ல் அவர் பலூச் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் பணியாற்றியபோது பலூச் மக்கள் ஒடுக்கப்படுவதை பார்த்ததே அவரை போராளியாக மாற்றி இருக்கலாம் என்கிறார்கள்.

குல் குடும்பம்

அதேநேரம் ரஹ்மான் குல்லின் சகோதரர் சரப் கான் இப்போதும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாகவே பணியாற்றி வருகிறார். அவரது மற்றொரு சகோதரர் மீரான் பலூச் ராணுவத்தில் சேர்ந்து போரிட்டதாக தகவல்கள் உள்ளன. களத்தில் மட்டுமின்றி கவிதை எழுதுவதிலும் ரஹ்மான் குல் சிறந்தவர் என்கிறார்கள். தனது கவிதைகள் மூலமாகவும் ரஹ்மான் குல் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கருத்துகளை மக்களிடையே பரப்பி வருகிறாராம். அவரது இரு கவிதை தொகுப்பு மற்றும் கட்டுரைகள் புத்தகமாக வெளியாகி இருக்கிறதாம்.

படிப்படியாக முன்னேறி!

பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்தவர் என்பதற்காகவே பலூச் படையில் இவருக்கு தலைமை பதவி வந்துவிடவில்லை. பலூச் அமைப்பிலேயே கீழே இருந்து மேலே வந்தவர் இவர். கரான் மற்றும் கலாத் பகுதிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பின்னர் மஜீத் பிரிகேடின் தலைவராகவும், அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் உயர்ந்தார். அதன் பிறகே இந்த பதவி கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் பலூசிஸ்தானில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 31 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இதை தாண்டி ரஹ்மான் குல் என்ன செய்ய போகிறார் என்பதே பெரிய கேள்வி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+