Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவாஸ் ஷெரீப் உயிருக்கு போராடுகிறார்... உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர் தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Nawaz Sharif fighting for life: Doctor | நவாஸ் ஷெரீப் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

    லாகூர்: நவாஸ் ஷெரீப் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரீப் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    69 வயதாகும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பஞ்சாப் சிங்கம் எனறு அவரது கட்சியினரால் அழைக்கப்படுகிறார். மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர் மீது 2017ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று வழக்கு பதியப்பட்டது.

    இதில் ஒரு வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    கவலைக்கிடம்

    கவலைக்கிடம்

    அவரது உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த கவலைக்கிடமான நிலையில் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வந்தனர். அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாடு செல்ல முடியாது

    இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நவாஸ் ஷெரீப்புக்கு காலவரையைற்ற ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. நவாஸ் பெயர் வெளிநாடு செல்ல தடுக்கப்பட்டோர் பட்டியலில் தான் உள்ளது. எனவே நவாஸ் ஆல் நாட்டிலேயே தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    மருத்துவர் தகவல்

    மருத்துவர் தகவல்

    இது ஒருபுறம் எனில் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவர் அட்னான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்.

    சிறுநீரகம் பாதிப்பு

    சிறுநீரகம் பாதிப்பு

    அவருக்கு சிறிய மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஷெரீப்பின் உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் குறைந்து காணப்படுகிறது. இவை இரண்டும் சிறுநீரக செயல்பாடுகளை மோசமாக்குவதால் மேலும் சிக்கலாகி உள்ளது.

    இரத்த அழுத்தம்

    இரத்த அழுத்தம்

    இரத்தத்தின் சர்க்கரை அளவு, ,இரத்த அழுத்த கட்டுப்பாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மிகவும் பலவீனமாகவும் மோசமடைந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+