தன் சீட்டில் தானே உட்கார்ந்த தானைத் தலைவராக மாறிய இங்கிலாந்து 'மாமிச மலை'!

Subscribe to Oneindia Tamil

இப்ஸ்விச், இ்ங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த 54 வயது நபர் மிகவும் கடுமையாகப் போராடி தனது மாபெரும் உடல் எடையை குறைத்து ஒரு தியேட்டர் சீட்டில் உட்காரும் அளவுக்கு ஸ்லிம்மாகியுள்ளார்.

அவரது பெயர் பால் மேசன். இவர் இங்கிலாந்தின் சப்போல்க்கில் உள்ள இப்ஸ்விச் நகரைச் சேர்ந்தவர். இவர் ஒரு சமயத்தில் 980 பவுண்டு அதாவது கிட்டத்தட்ட 445 கிலோ எடையுடன் நடக்கக் கூட முடியாமல் இருந்தவர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றின் மூலம் இவர் 295 கிலோ எடையைக் குறைத்து தற்போது 150 கிலோ எடைக்கு வந்துள்ளார். தற்போது தனது காதலி ரிபெக்கா மவுன்டைனுடன் நேரத்தை சந்தோஷமாக செலவிடவும் ஆரம்பித்துள்ளார்.

சினிமா பிரியர்...

சினிமா பிரியர்...

ஒரு காலத்தில் உலகிலேயே அதிக எடை கொண்ட மனிதராக திகழ்ந்தவர் பால். சினிமாவுக்குப் போவதை அதிகம் விரும்பியவர். ஆனால் அது முடியாததாக இருந்தது.

போஸ்ட்மேன்...

போஸ்ட்மேன்...

போஸ்ட்மேனாக வேலை பார்த்தவர் இவர். ஆனால் உடல் எடை கூடுதலால் வேலையை விட்டு விட்டார். தனது வீட்டை விட்டு நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆபரேஷன் மூலம்...

ஆபரேஷன் மூலம்...

இந்த நிலையில் கடந்த 5 வருடமாக தனது எடையைக் குறைக்க அவர் கடுமையாக போராடினார். சமீபத்தில் இவரது கூடுதல் கொழுப்பைக் குறைக்க ஆபரேஷன் நடந்தது. கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் நடந்தது. இதற்குப் பின்னர் அவரது எடை வெகுவாக குறைந்தது.

எடை குறைப்பு...

எடை குறைப்பு...

இதன் மூலம் தற்போது 150 கிலோவுக்கு அவர் குறைந்துள்ளார். இதையடுத்து அமெரி்காவின் மாசசூசட்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனது காதலி ரிபெக்காவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சக்சஸ்...

சக்சஸ்...

தனது நீண்ட நாள் கனவான சினிமாவுக்கும் கூட போக ஆரம்பித்துள்ளார் பால். தியேட்டர் சீட்டில் தானாகவே உட்கார முடிகிறதாம் இவரால் இப்போது.

ஹேப்பி...

ஹேப்பி...

30 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் தன்னால் ஜோடியாக உட்கார்ந்து படம் பார்க்க முடிந்தது என்று சந்தோஷமாக கூறுகிறார் பால்.

தானாகவே...

தானாகவே...

நின்று கொண்டே குளிக்கிறாராம். வீல் சேரை விட்டு தானாகவே எழுந்து நடக்கிறார். அவராகவே பெட்டிலிருந்து எழுகிறார், படுக்கிறார். எல்லாவற்றையும் அவராகவே செய்ய முடிகிறதாம்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை...

ஆச்சர்யம் ஆனால் உண்மை...

மேலும் தனது உடைகளையும் தானாகவே போட முடிகிறதாம். எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது, வினோதமாக இருக்கிறது என்று கூறிச் சிரிக்கிறார் பால். அதோடு, கூடிய விரைவில் அமெரி்க்காவிலேயே வேலையும் பார்த்து செட்டிலாகி விடவும் பால் திட்டமிட்டிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+