ஆதி தாத்தா ‘ஹோமோ எரக்டஸ்’ன் மண்டை ஓட்டு படிமம் சீனாவில் கண்டெடுப்பு
பீஜிங்: மனித இனத்தின் மூதாதையர் எனக் கூறப்படும் ஹோமோ எரக்டஸ்-ன் மிகப் பழமையான மண்டையோட்டு படிமத்தை சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய காலத்தில் மனிதர்களைப் போன்ற எலும்பு அமைப்புகளுடனும், மரபணு கூறுகளுடனும் வாழ்ந்த நமது மூதாதையர்கள், ‘ஹோமோ எரக்டஸ்' என அழைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஹுவலாங்டாங் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வித்தியாசமான விலங்குகளின் படிமம்...
இதுவரை அந்தப் பகுதியில் இருந்து பண்டைய காலத்தைச் சேர்ந்த வித்தியாசமான விலங்கு வகைகளின் படிமங்களுடன் அவற்றின் பற்கள், எலும்புகள், மண்டையோட்டின் சிறு பாகங்கள் மற்றும் கற்கால கருவிகள் என பல்வேறு படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகள்...
இவற்றைக் கொண்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் துறை வல்லுனர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

ஹோமோ எரக்டஸ்...
அந்தவகையில் தற்போது இப்பகுதியில் ஹோமோ எரக்டஸின் மிகப்பழமையான மண்டையோட்டு படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 1,50,000 மற்றும் 4,12,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பரிணாம வளர்ச்சி...
மேலும், இந்த மண்டையோட்டு படிவத்தின் மூலம் சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பீக்கிங் மனிதன்...
முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு போன்ற மனிதன் பீக்கிங் மனிதனின் படிமங்கள் பீஜிங் நகரின் ஸோவ்கோவ்டியன் குகைகளில் கடந்த 1929 முதல் 1937-ம் ஆண்டுவரை நடந்த ஆகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications