வாழை நாரில் இருந்து சானிட்டரி நாப்கின் தயாரிப்பு: இந்திய மாணவருக்கு ஹார்வார்டு பல்கலை. விருது
நியூயார்க்: அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்றதாகும். இதில் நடந்த புதிய தொழில் ஐடியாக்களுக்கான போட்டியில் 4 இந்திய மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் புதிய தொழில் முனைவோர்களுக்கான 'நியு வென்ச்சர்' போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டி புதுமையான தொழில்கள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
அதில் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களும், ஏற்கனவே படித்த மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போட்டியில் புதுமையான முறையில் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையிலான தொழில்களை செய்து வந்த இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா சைகல், பிரிதார் குமார், மீரா மேத்தா, மற்றும் நிக் லாரன்ஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இவர்களில் அம்ரிதா சைகல் 'ஸாதி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வீணாக போகும் வாழை நாரில் இருந்து கிராமப்புற பெண்களுக்கான சானிட்டரி பேடுகளை தயாரித்து குறைவான விலையில் விற்று வருகிறது. இந்தியாவில் இரண்டு கிராமங்களில் மட்டுமே இயங்கி வரும் 'ஸாதி' விரைவில் தனது தொழிலை 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி 5 கிராமங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
பிரிதார் குமார் என்பவர் 'பூயா பிட்னஸ்' என்ற உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறார். வீடியோ வழியாக பயிற்சியாளர்கள் மூலம் குறைவான கட்டணத்தில் பயிற்சி அளித்து வருகிறார்.
மீரா மேத்தா, நிக் லாரன்ஸ் ஆகிய இருவரும் 'டோமேட்டோ ஜாஸ்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். இவர்கள் சிறிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் நைஜீரியாவில் விளையும் தக்காளிகளை 'ஜாமாக' மாற்றி பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.
ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எம்.பி.ஏ. மாணவர்களான (2014) இவர்கள் நால்வருக்கும் வழங்கப்பட்டுள்ள பரிசின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.80 கோடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications