சார்ஜாவில் பயங்கர கார் விபத்து: இந்தியர் உட்பட 4 பேர் பலி!
சார்ஜா: சார்ஜாவில் நேற்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து ஒன்றில் ஒரு இந்தியர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
சார்ஜா ராணுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது ராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்து போய் தனது அன்றாட அலுவல்களில் மூழ்கிப் போனார்.
இந்த நிலையில், உயரதிகாரிகளின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் தயாரானபோது சீருடைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர் சலவைக்கு துணி போட்ட கடைக்கு போன் செய்தார்.
சலவைக் கடைக்கு விரைவு:
நள்ளிரவு சுமார் 2 மணி ஆனதால் கடை மூடப்பட்டிருக்கவே அதில் வேலை செய்யும் ஊழியர்களை தேடிச் சென்ற அவர், இருவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக ஓட்டும்படி டிரைவரிடம் கூறினார்.
இரண்டு துண்டாகிய கார்:
அவசரமாக காரை ஓட்டிய டிரைவர் சார்ஜா விமான நிலையம் அருகே சாலையோரமாக பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்கத் தவறிய அதே வேளையில் அந்த லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிய கார் இரண்டு துண்டங்களாகியது.
துண்டிக்கப்பட்ட தலைகள்:
முன் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட இருவர் தலை துண்டிக்கப்பட்டு கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
நான்கு பேரும் பலி:
ராணுவ அதிகாரி உள்பட பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் பலியாகினர்.
2 பேர் ஆசியர்கள்:
இறந்த நான்கு பேரில் இரண்டு பேர் எமிரேட்ஸைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஆசியர்கள், அதில் ஒருவர் இந்தியர் என்று தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications