இந்தோனேசிய கடலுக்கு அடியில் 59 அடி நீள பொருள்: ஏர் ஏசியா விமான பாகமா?
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணி துவங்கி இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜாவா கடல் பகுதியில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

4 பெரிய பொருட்கள்
தேடல் பணி நடக்கும் இடத்தில் கடலின் தரை மட்டத்தில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

59 அடி நீளம்
கடலின் தரைமட்டத்தில் கிடக்கும் 4 பெரிய பொருட்களில் ஒன்று 59 அடி நீளம் கொண்டதாக உள்ளது.

கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டியை தேட சிறப்பு கருவிகள் ஜாவா கடல் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாக மோசமான வானிலை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

தேடல்
கடலுக்கு அடியில் சென்று உடல்கள் மற்றும் விமான பாகங்களை தேடும் பணியில் 89 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரஷ்யாவில் இருந்து டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர் என்று தேடல் பணிக்கு தலைமை வகிக்கும் பாம்பங் சுலிஸ்டியோ தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications