வங்கதேசத்தின் மூக்கை உடைத்த பிரான்ஸ்.. முகமது யூனுஸை எல்லாம் சந்திக்க முடியாது.. மேக்ரான் அதிரடி
டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. நம் நாட்டுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மிகவும் நட்பாக பழகி வருகிறார். இந்நிலையில் தான் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேரம் கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதனை தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருக்கிறார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி நம் நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 7 மாநிலங்களுக்கு எதிராகவும், அங்கு சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறது. இது நம் நாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தின் இந்த சதி வேலைகளுக்கு நம் நாடும் உரிய பதிலடியை கொடுத்து வருகிறது. கொரோனா காலத்தில் நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை பயன்படுத்தி வங்கதேசம் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரியது. அப்போது வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். நம் நாடும் அனுமதி வழங்கியது. ஆனால் முகமது யூனுஸ் நம் நாட்டை எதிர்ப்பதால் இந்த அனுமதி என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சரி இது இருக்கட்டும். இப்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று பிரான்ஸ். அந்த நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ், இமானுவேல் மேக்ரானை சந்திக்க முடிவு செய்தார்.
அதாவது அடுத்த மாதம் மூன்றாவது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (3rd United Nations Ocean Conference) நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஜூன் மாதம் 9ம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முகமது யூனுஸ் பங்கேற்க தயாராகி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச முகமது யூனுஸ் அனுமதி கோரியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது பிரான்ஸ் - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை விரிவுப்படுத்துவது பற்றி விவாதிக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து முகமது யூனுஸ் அந்த மாநாட்டுக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். இது வங்கதேசத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதாவது வங்கதேசம் சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளை கடந்த பிற நாடுகளுடன் உறவை வளர்க்க நினைக்கிறது. அதன்படி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் அது வங்கதேசத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதாவது இந்த மாநாட்டின்போது ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு நடத்த உள்ளனர். இதற்கான அட்டவணை முன்கூட்டியே தயாராகிவிட்டது. ஆனால் வங்கதேசம் கடைசி நேரத்தில் அனுமதி கோரியுள்ளதால் பிரான்ஸ் சார்பில் நேரம் ஒதுக்கமுடியவில்லை என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications