"பளார்.." பிரான்ஸ் அதிபர் மேக்ரூனை அருகில் அழைத்து.. அறைவிட்ட நபர்.. பரபரப்பு சம்பவம்.. வைரல் வீடியோ
பாரிஸ்; பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் நபர் ஒருவர் அறைவிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க பல்வேறு நாட்டு அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் எதிராக மக்கள் கொந்தளிப்பதும், போராடுவதும் அதிகமாகி உள்ளது. ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடக்கின்றன.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக நடந்த போராட்டங்கள், அவர் தேர்தலில் தோல்வி அடையவும் கூட காரணமாக இருந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனுக்கு எதிராகவும், அவர் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராகவும் பிரான்சில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பாரிஸ்
இந்த நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் டிரோம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்களிடம் ஆலோசனை செய்வதற்காகவும், அவர்களிடம் கருத்து கேட்பதற்காகவும் இம்மானுவேல் மேக்ரூன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் வரிசையாக மக்களிடம் இம்மானுவேல் மேக்ரூன் கருத்துக்களை கேட்டு வந்தார்.

என்ன நடந்தது
இந்த நிகழ்வின் போது அங்கிருந்த நபர் ஒருவர் இம்மானுவேல் மேக்ரூனை அருகில் அழைத்து பேச முயன்றார். இம்மானுவேல் மேக்ரூனும் அருகில் சென்றார். இந்த நிலையில் திடீரென அந்த நபர் இம்மானுவேல் மேக்ரூனின் ஒரு கையை பிடித்துக் கொண்டு, தன்னுடைய இன்னொரு கையால் பளார் என்று இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் அறைந்தார்.

வைரல்
ஒரு நாட்டின் அதிபர் இப்படி கன்னத்தில் பளார் என்று அறை வாங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மானுவேல் மேக்ரூன் அறை வாங்கிய உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள், அந்த நபரை பிடித்தனர். இம்மானுவேல் மேக்ரூன் உடனே சில அடி தூரம் நகர்ந்து சென்று, பாதுகாவலர்களுடன் நின்று கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
|
கைது
இம்மானுவேல் மேக்ரூனை அறைந்த நபர் உடனடியாக கைது செய்தார். இந்த சம்பவத்தின் போது இம்மானுவேல் மேக்ரூனின் கொள்கைகள் ஒழிக என்று இன்னொரு நபர் கூச்சலிட்டார். அவரும் உடனே கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் அதிபரை இவர்கள் திட்டமிட்டு தாக்கி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications