அட.. டாமினோஸ் லோகோவை பச்சை குத்திக் கொண்டால் இலவச பீஸா.. நூற்றுக்கணக்கில் குவிந்த மக்கள்!
தங்கள் நிறுவனத்தின் லோகோவை பச்சை குத்திக் கொண்டால் இலவச பீஸா அளிக்கப்படும் என்று டாமினோஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மாஸ்கோ: தங்கள் நிறுவனத்தின் லோகோவை பச்சை குத்திக் கொண்டால் இலவச பீஸா அளிக்கப்படும் என்று டாமினோஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
டாமினோஸின் ரஷ்யா கிளை இதை தெரிவித்து இருந்தது. உலகில் உள்ள பிரபல உணவகங்களில் டாமினோஸ் உணவகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக டாமினோஸ் இப்படி செய்துள்ளது. இந்த நிலையில் இது அந்த நிறுவனத்திற்கே பிரச்சனையாகி உள்ளது.

என்ன சொன்னது
ரஷ்யா டாமினோஸ் ''எங்கள் நிறுவனத்தின் லோகோவை உடலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இலவச பீஸா அளிக்கப்படும். ஒரு வருடத்திற்கு 100 பீஸா என்று 100 வருடத்திற்கு பீஸா அளிக்கப்படும்'' என்று பெரிய ஆஃபர் அளித்தது.

நிறைய பேர் வந்தனர்
இது பெரிய வைரல் ஆனது. இதனால் பல பேர் பச்சை குத்த முன்வந்தனர். நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து பச்சை குத்திக் கொண்டனர். இதை தங்கள் இணைய பக்கத்திலும் டாமினோஸ் பார்எவர் (#DominosForeve) என்ற ஹேஷ்டேக்கில் வெளியிட்டனர்.

4 நாட்கள்
இவ்வளவு பேர் வருவார்கள் என்று டாமினோஸ் நிறுவனமே நினைக்கவில்லை. இதனால் டாமினோஸ் நிறுவனம் இரண்டு மாதம் நடத்த வேண்டிய இந்த போட்டியை 4 நாட்களில் நிறுத்தியது. இறுதியாக 400 பேர் இந்த வாழ்நாள் இலவச பீஸா சலுகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாரகள்.

மோசமான பெயர்
இந்த நிலையில் இது அந்த நிறுவனத்திற்கே பிரச்சனையாகி உள்ளது. விளம்பரத்திற்காக ஒரு நிறுவனம் இப்படி எல்லாம் செய்யலாமா, இது முறையா என்று பலர் கேட்டுள்ளனர். விளம்பரம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications