துபாயில் இன்று இலவச மருத்துவ முகாம்: மிஸ் பண்ணாதீங்க
Subscribe to Oneindia Tamil
துபாய்: பாகிஸ்தான் அசோசியேஷன் துபாய்(பிஏடி) அமைப்பு துபாயில் இன்று இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
பாகிஸ்தான் அசோசியேஷன் துபாய்(பிஏடி) அமைப்பு இலவச மருத்துவ முகாமை துபாயில் இன்று நடத்துகிறது. பிஏடி அமைப்பின் மருத்துவ பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த முகாம் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
குழந்தைகள், பல் மருத்துவம், இஎன்டி, தோல், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிபுணர்களாக உள்ள மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் முகாமிற்கு வருவோரை இலவசமாக பரிசோதிக்க உள்ளனர்.
ஏற்கனவே ஏதாவது பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவோர் அதற்கான அறிக்கையை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்து மேதா ரோட்டில் இருக்கும் பிஏடி மையத்திற்கு எக்ஸ்23, சி18 மற்றும் 44 ஆகிய பேருந்துகள் மூலம் வரலாம்.












Click it and Unblock the Notifications