நாளை துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது.
துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் சென்டருடன் இணைந்து நாளை (21.03.2014) காலை 8 மணி முதல் 11.30 வரை துபாய் சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த தகவலை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள், துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், ஈடிஏ அஸ்கான் குழும அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கென பிரத்யேகமாக நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications