துபாயில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈடிஏ ஸ்டார் இன்டர்நேஷனல் ஊழியர்களுக்கென பிரத்யேக மருத்துவ முகாம் 28.03.2014 அன்று அல் பரஹா மருத்துவமனையில் நடைபெற்றது.
இசிஜி, எக்ஸ் ரே, பல், எலும்பு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் தொழிலாளர்களை பரிசோதித்து அதற்குரிய மருந்துகள் வழங்கினர்.

இம்முகாமில் 75 தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.

தொழிலாளர் நல அலுவலர் விவேக், ஹபிப், அஷ்ரஃப், மீரான் சாஹிப் உள்ளிட்டோர் மருத்துவ முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications