நடிகையுடன் தொடர்பால் சினேகிதி கோபம்.. நெருக்கடியில் பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த்!!
பாரீஸ்: தமது சினேகிதி டிரயர் வைலரிக்கு தெரியாமல் நடிகை கேயட்டுடன் பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் ரகசியமாக உறவு வைத்துள்ளதாக வெளியான செய்தி அவரை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த், பத்திரிகையாளர் வைலரியுடன் நீண்டகாலமாக தொடர்பு வைத்திருந்தார். அந்நாட்டின் முதல் பெண்மணியாகவும் வைலரி இருந்து வந்தார்.
இந்நிலையில் தம்மைவிட 18 வயது குறைவான கறுப்பின நடிகை ஜூலி கேயட்டுடன் ஹொலாந்துக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால் வைலரி மன உளைச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹொலாந்த், பிரான்ஸின் முதல் பெண்மணியாக வைலரி நீடிக்கிறாரா என்று கேட்டதற்கு உங்கள் கேள்வி புரிகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட வாழ்வில் சோதனைமிக்க காலங்கள் வரும்.
இப்போது எனக்கு அத்தகைய வேதனை காலம் வந்துள்ளது. எனக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. தனிப்பட்ட விவகாரங்களை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்வேன். இப்போது அதற்கு உகந்த காலமோ இடமோ இல்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை என்றார்.
2007ம் ஆண்டிலிருந்து தனது சினேகிதியாக இருந்த வைலரியுடன் நட்பு இருக்கிறதா இ்ல்லையா என்பதை பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் அறிவிக்க வேண்டும் என்று என்று நண்பர்களும் அரசியல் வட்டாரங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications