60வது பிறந்தநாள்... 2 குழந்தைகளுக்குத் தாயான 42 வயது நடிகையை மணக்கிறார் பிரான்ஸ் அதிபர்?
பாரீஸ்: அடுத்தமாதம் தனது காதலியான நடிகை ஜூலி கெயெட்டை திருமணம் செய்து கொள்ள பிரான்ஸ் அதிபர் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக உள்ள பிராங்கோயிஸ் ஹாலண்டே, முதலில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் செகொலேன் ராயலுடன் குடும்பம் நடத்தினார். இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், திடீரென செகோலேனைப் பிரிந்த அதிபர், பத்திரிகையாளரான வேலரி ட்ரையெர்விய்லெர்(49) என்பவருடன் அதிபர் மாளிகையான ‘எலிசீ பேலஸ்'சில் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.

ஆனால், அவருடனும் பிராங்கோயிஸுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய வேலரி ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு பிறகு பிராங்கோயிஸ் ஹாலண்டே-வை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி கெயெட்டும், அதிபரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
ஆரம்பத்தில், இத்தகவலை அதிபர் தரப்பு மறுத்தது. ஆனால், கடந்த வாரம் செய்தியாளர்களின் கேள்விக்கு இது தொடர்பாக நேரடியாக பதிலளித்தார் பிராங்கோயிஸ் ஹாலண்டே. அப்போது, ‘ஏதும் முக்கியமான தகவல் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்' என அவர் உறுதியளித்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் பிராங்கோயிஸ் ஹாலண்டே. அப்போது, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெயெட்-டை திருமணம் செய்துக் கொள்ள அதிபர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications