பாரீஸ்: 80 முறை கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது
பாரீஸ்: குடும்பத்தகராறில் கட்டிய கணவனை 80 முறை கத்தியால் குத்தி செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள நங்கிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவர் ஏராளமான கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றடைவதற்குள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக இறந்துப் போனார்.
அந்த வீட்டில் அவருடன் தனியாக வசித்து வந்த மனைவியை போலீசார் துருவித்துருவி விசாரித்ததில், கணவனுக்கும், தனக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆவேசமடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுமார் 80 முறை அவரை மாறி, மாறி குத்திக் கொன்றதாக கூறினார். ஆனால், என்ன காரணத்துக்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது? என்பது தொடர்பாக ஏதும் கூற அந்த 35 வயது பெண் மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன? என்ற உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக அந்த பெண்ணை இன்று உளவியல் நிபுனரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர். இந்த பரிசோதனைக்கு பின்னர் கொலைக்கான பின்னணி பற்றி தெரிந்துவிடும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications