ஜெர்மனியின் புதிய பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ்.. இரண்டாம் வாக்கெடுப்பில் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனி நாட்டின் பிரதமர் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று நடந்த ரகசிய வாக்கெடுப்பில் முதல் முறை தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது முறையாக நடந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது. சோஷியல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைத் தழுவியது. இந்நிலையில், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

Friedrich Merz becomes Germany s new Chancellor

630 இடங்களை கொண்ட ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் ஆவதற்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால், ஜெர்மனி கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் அவர் இன்று 310 வாக்குகளை மட்டுமே பெற்றார். அவர்களது கூட்டணிக்கு 325 வாக்குகள் இருந்த நிலையிலும் அவர் தோல்வி அடைந்தார்.

மத்திய - இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியினர் உடனான அவரது கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்கள் உள்ளன. ஆனால் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பின்வாங்கிவிட்டனர். முதல் வாக்கெடுப்பில் மெர்ஸ் வெற்றி பெற முடியவில்லை. போருக்குப் பிந்தைய ஜெர்மனியில் முதல் முறையாக ஒரு பிரதமர் வேட்பாளர் முதல் சுற்றில் வெற்றி பெறத் தவறியது இதுவே முதல் முறை.

பாராளுமன்றத்தில் பல மணிநேர நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு, கட்சிகளும் பாராளுமன்றத் தலைவரும் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் 325 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், ஜெர்மனியின் 10 ஆவது பிரதமர் ஆகிறார் ஃப்ரெட்ரிக் மெர்ஸ். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மெர்ஸுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1989 ஆம் ஆண்டு ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் 69 வயதான மெர்ஸ். உலகளாவிய கொந்தளிப்பான நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதாக உறுதியளித்து தேர்தலில் வென்றிருந்தார் மெர்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+