Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தின் ராஜ மாதா டூ மரண தண்டனை.. ஷேக் ஹசீனா வழக்கு கடந்து வந்த பாதை

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் ராஜ மாதாவாக கடந்த 15 வருடங்கள் இருந்த ஷேக் ஹசீனா தற்போது அதே நாட்டின் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் அந்த நாட்டில் கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஹசீனா பதவியை ராஜினாமா செய்து, அவரின் அரசாங்கமே கவிழும் அளவுக்கு போராட்டம் வெடித்தது. இதில் 1,000 கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயமடைந்தனர். ஷேக் ஹசீனா இந்தியாவில் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகிறார். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

வங்கதேசம் அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர் ஷேக் ஹசீனா. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரை வங்கதேச பிரதமராக இருந்தார். கடந்த 2024 ஆம் வருடம் ஜூலை மாதம் சிவில் சர்வீஸ் தேர்வு இட ஒதுக்கீட்டில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் தங்களின் உரிமையை கேட்டு போராட்டத்தில் இறங்கினார்கள். வங்கதேசம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமளவுக்கு அழுத்தம் சென்றது.

Sheik Hasina Bangladesh

வங்கதேசம் மாணவர்கள் போராட்டம்

இந்த சம்பவத்தில் ஹசீனா மீது 5 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கொலை செய்ய தூண்டியது, போராட்டக்காரர்களை தூக்கிலிட உத்தரவிட்டது, கடுமையான ஆயுதங்களால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, உடனடியாக அமைதியை நிலைநிறுத்த ஹெலிகாப்டர், ட்ரோன்கள் பயன்படுத்தியது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தகவல்படி இந்தப் போராட்டத்தில், 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேசம் பற்றி எரிந்து கொண்டிருக்க உலகம் முழுவதும் அதன் அதிர்ச்சி பரவியது. ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹசீனா இந்தியாவில் தலைமறைவானார்.

ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டு

அவரின் அவாமி லீக் அரசியல் கட்சியும் வங்கதேசத்தில் துடைத்து எறியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வங்கதேசம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் விசாரணையின்போது கூட ஹசீனா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஹசீனா செயல்பட்டதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஷேக் ஹசீனா, வங்கதேச முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்தது. ஹசீனா உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் கூடிய 747 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தல் சமர்ப்பிக்கப்பட்டன. முக்கியமாக அவர் ரோகையா பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சங்கர் புல்லில் 6 மாணவர்கள், கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் இந்தியா தப்பிக்கும்போது கூட 6 பேரை சுட்டு கொன்றதாக புகார் எழுந்தது.

மரண தண்டனை

மேலும் ஒருவரை உயிருடன் எரித்து கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. குற்றத்தை தடுக்க தவறியதுடன், மனித குலத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தான் ஹசீனாவுக்கு வங்கதேசம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+