டேய் பக் குட்டிப் பையா.. தண்ணி இங்க விழுதுடா இதை குடிடா!
நிழல் நீரை குடிக்க பக் நாய்க்குட்டி முயற்சிக்கிறது.
சென்னை: பொதுவா சொல்வோம்.. குட்டியா இருக்கும்போது கழுதைகூட அழகாதான் இருக்கும்னு!
உண்மையிலேயே இந்த குட்டிகள்தான் எவ்வளவு அழகு... எதை செய்தாலும் அங்கே அழகை தவிர வேற எதையுமே ரசிக்க தோணுவதில்லை. அது நாயாக இருந்தாலும் சரி, யானையாக இருந்தாலும் சரி!

தீங்கு செய்யாதது
இதில் செல்லப்பிராணி என்றாலே முதலில் வருவது நாய்தான். அதிலும் ரொம்ப ரொம்ப செல்லம் பக் இனம் நாய்தான். வீட்டுக்காவலுக்கு தான் நாய் வளர்ப்பது என்பது போய் அழகிற்காகவும், ஆசைக்காகவும் வளர்க்கப்படுவது இந்த பக் தான். இதற்கு காரணம் எந்த தீங்கையும் யாருக்குமே செய்யாது. அதுமட்டுமல்லாமல் குழந்தையைபோல் பத்திரமாகவும் அன்பாகவும் இந்த வகை நாயை வளர்த்து வருகிறார்கள்.
வீடியோ வைரல்
இப்படித்தான் ஒரு பக் நாய்-க்கு தாகம் எடுத்தது. அதனால் தண்ணீர் குடிக்க அங்கிருந்த ஒரு குழாய் அருகில் சென்றது. அப்போது அந்த பைப்பிலிருந்து தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அப்போது நல்ல வெயில் வேறு. அதனால் பைப் நீரின் நிழல் பளிச்சென அங்கு விழுந்தது. அந்த நிழலை பார்த்த பக் அது நிஜமான நீர் என நினைத்து அதனை குடிக்க முயற்சி செய்கிறது. பக்-கின் இந்த கியூட்டா செயலை ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் அள்ளுகிறது.

குட்டி யானைகள்
இதேபோலதான் அமெரிக்காவில் சான்-டியேகோ என்ற வன உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு 2003-ம் ஆண்டு ஸ்வாஸிலேண்ட் வனப்பகுதியில் இருந்து, யானைகள் மீட்டுக் கொண்டுவரப்பட்டு அவைகள் மிகவும் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் பிறந்து சில வாரங்களே ஆன குட்டி யானைகள் செய்யும் செயல்கள் உலக மக்களை கவர்ந்து வருகிறது.

உணவு பெட்டி
பலம் பொருந்திய யானைகளின் செயல்களையும், அதற்கு மதம்பிடித்து மனிதர்களை கொன்றதையும்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த குட்டி யானைகள் நடக்க கூட முடியாமல் தட்டு தடுமாறி எழுந்திருப்பதை பார்க்கவே புதுசாகவும் அழகாகவும் இருக்கிறது. அங்கே இந்த யானைகளுக்கு ஒரு பெட்டியில் உணவு வைக்கப்பட்டுள்ளது.
கீழே விழும் யானைகள்
ஆனால் அந்த பெட்டியை கூட இந்த யானைகளால் நகர்த்த முடியாமல் திணறுகின்றன. அதுமட்டுமல்லாமல் குட்டியானைகள் நடக்க தெரியாமல் நடந்து, கீழே பொத் பொத் தென்று தடுமாறி கீழே விழும் காட்சிகளும் வீடியோவாக வைரலாகி வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications