ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்!
ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை விவரித்தார். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்யும் எனவும் அறிவித்தார்.

ஜோ பைடனும் மோடி சந்திப்பு
இம்மாநாட்டின் போது அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடியின் தோள் மீது கை போட்டபடியே ஜோ பைடன் உரையாடினார். பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரதமர் மோடியின் கைகளை இறுகப்பற்றியபடி உரையாற்றினார்.

சர்வதேச தலைவர்களுடன்...
மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல் மெர்கல், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங், தென்கொரியா பிரதமர் மூன் ஜே இன் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்தார். உலக நாடுகளின் தலைவர்களுடனான பிரதமர் மோடி சந்திப்பு படங்களை அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பிரதமர் அலுவலகம்.

பிரான்ஸ் பிரதமருடன் சந்திப்பு
பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரானுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதில் இரு தலைவர்களும் கடந்த மாதம் தொலைபேசியில் உரையாடினர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உருவாக்கவும் எந்த ஒரு கூட்டணியிலும் இணையாமல் இருக்கவும் இரு தலைவர்களும் அப்போது முடிவு எடுத்திருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சஸும் இந்தியா-பிரான்ஸும்
அதாவது அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ நலன்களுக்கான 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவை புறக்கணித்துவிட்டு ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இணைந்து ஆக்சஸ் ஒப்பந்த்த்தை உருவாக்கின. இதற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதுதான் பிரதமர் மோடி, பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications