இந்தியா வேண்டுமென்றே சீண்டுகிறது.. கால்வன் பள்ளத்தாக்கு எங்களுடையது.. உண்மைக்கு புறம்பாக பேசும் சீனா
பெய்ஜிங்: இந்தியா வேண்டுமென்றே சீனாவை சீண்டி ஆத்திரத்தை கிளப்பும் தாக்குதல்களை நடத்துகிறது என சீன ராணுவ அதிகாரி உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இது போராக வெடிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குற்றச்சாட்டுகள்
இந்த விவகாரத்தில் வழக்கம்போல் இந்தியா மீது சீனா தவறான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து சீன ராணுவத்தின் மேற்கு கமாண்டோவின் செய்தித் தொடர்பாளர் கலோனல் ஜாங் சூயிலி குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறுகையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதி எப்போதுமே எங்களுக்கே சொந்தமானது.

இந்திய ராணுவத்தினர்
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். இதுவே கைகலப்புக்கு வழிவகுத்து உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. எரிச்சலூட்டும் செயல்கள் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். சீனாவுடன் சமாதானமாக செல்ல வேண்டும். அத்துமீறல்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா முன் வர வேண்டும் என்றார்.

மரணம்
இந்தியா மீது குற்றம்சாட்டும் கலோனல் அதற்கான எந்தவித ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அதே நேரம் இந்திய சீனா எல்லையில் இரு தரப்பிலும் எத்தனை வீரர்கள் மரணமடைந்தார்கள் என்பது குறித்தும் அவர் சொல்வதை தவிர்த்துவிட்டார்.
Recommended Video

5 வீரர்கள்
சீன தரப்பில் இருந்து இதுவரை 43 ராணுவத்தினர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் சீன வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications