காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 1800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் 67 இஸ்ரேலியர்களும் பலியாகி இருக்கின்றனர்.

72 மணி நேர யுத்த நிறுத்தம்
இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேர யுத்தம் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பரஸ்பரம் புகார்
உள்ளூர்நேரப்படி அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரத்துக்கு இந்த யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டாலும் அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கெய்ரோ பேச்சுவார்த்தை- இஸ்ரேல் புறக்கணிப்பு
இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட போது, இஸ்ரேல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.

ஏற்க தயார்
எனினும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் ஒப்புக்கொள்ள தயார் என இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹமாஸ் அறிவிப்பு
அதே போல் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான சமி அபு சுக்ரி, எகிப்து முன்வைத்த யோசனையை தாங்களும் ஏற்பதாக தெரிவித்தார். எகிப்து அதிகாரிகளும் இந்த 72 மணி நேர யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications