பிரான்ஸில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
பாரீஸ்: பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 150 பேரும் பலியாகியுள்ளனர். மேலும் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லுப்தான்சா நிறுவனத்திற்கு சொந்தமான ஜெர்மன் விங்ஸ் நிறுவன விமானம் 144 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியில் இருக்கும் டுசல்டார்ப் நகருக்கு செவ்வாய்க்கிழமை கிளம்பியது.
விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டி
ரிவியரா நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேகம்
விமானம் விபத்துக்குள்ளாக 15 நிமிடங்களுக்கு முன்பு அதன் வேகம் வெகுவாக குறைந்தது தெரிய வந்துள்ளது.

விமானம்
பெரிய விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதை பார்த்தோம். அதில் பயணித்தவர்களின் உடல்கள் கூற முடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் குழந்தைகள்
விமானத்தில் 16 பள்ளிக் குழந்தைகள், 2 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். விமானத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 67 பேரும், ஸ்பெயினைச் சேர்ந்த 45 பேரும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளனர்.

பாடகர்கள்
கஜகஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஓலேக் ப்ரிஜாக் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பாடகி மரியா ராட்னர் ஆகியோரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.

ஏ320
விபத்துக்குள்ளான விமானம் ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்தது. அந்த விமானத்தை லுப்தான்சா கடந்த 1991ம் ஆண்டு வாங்கியுள்ளது. 24 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வானிலை
ஆல்ப்ஸ் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications