46 மணி நேரம் பிறந்தநாள் கொண்டாடி சாதனை படைத்த ஜெர்மன்காரர்- கின்னஸிலும் இடம்!
லண்டன்: ஜெர்மனிக்காரர் ஒருவர் வித்தியாசமாக விமான பயணத்தில் தனது பிறந்தநாளை அனுபவித்துக் கொண்டாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
அதாவது, தனது பிறந்த நாளின் 24 மணிநேரத்தை 46 மணி நேரமாக நீட்டித்து அதில் 13 மணி நேரத்தை விமான பயணத்தில் செலவிட்டிருக்கிறார்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்வென் ஹெகெமெயெர் தனது 26 ஆவது பிறந்தநாளை கின்னஸ் சாதனையாக்க வேண்டும் என எண்ணினார்.

சாதனை முறியடிப்பு முயற்சி:
ஏற்கனவே 35 மணி நேரம் 30 நிமிடத்துக்கு தனது பிறந்தநாளை நீடித்த நர்கீஸ் பிம்ஜி என்பவரின் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
விமானம் மூலம் பயணம்:
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் இருந்து விமானம் மூலம் பயணிக்க தொடங்கிய ஸ்வென், நியூசிலாந்தின் உள்ளூர் நேரத்திலிருந்து 2 மணி நேரம் பின்னோக்கிய நேரத்தைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை அடைந்தார்.
பின்னோக்கிய நேரம்:
அதன் பின்னர் பிரிஸ்பேனின் உள்ளூர் நேரத்திலிருந்து 20 மணி நேரம் பின்னோக்கிய நேரத்தைக் கொண்ட ஹவாயின் ஹோனோலு சென்றடைந்தார்.
46 மணி நேரம் கொண்டாட்டம்:
தனது 46 மணிநேர பிறந்தநாளில் 13 மணி நேரம் 10 நிமிடங்களை விமான பயணத்தில் கழித்த இவருக்கு ஆக்லாந்தில் கிடைத்த கான் என்கிற கார் ஓட்டுனர், அந்நகரின் முக்கியப் பகுதிகளை வெறும் 90 நிமிடங்களில் சுற்றிக் காண்பித்ததாக ஸ்வென் கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டம்:
கடந்த 2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை இரண்டு முறை பிறக்கச் செய்தது பிரைவேட்லி.காம் என்கிற ஜெட் நிறுவனம். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறந்த பின்னர் பயணத்தை தொடங்கிய இந்த ஜெட் நிறுவன விமானம் அதன் பயணிகளை உள்ளூர் நேரப்படி 17 மணி நேரம் பின்னோக்கிய நேரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு அழைத்துச் சென்று புத்தாண்டை மீண்டும் கொண்டாட வைத்தது.
அதிகாரப் பூர்வ அறிவிப்பு:
ஸ்வென் இந்த கின்னஸ் சாதனையை கடந்த ஆண்டு செய்தார். எனினும், கின்னஸ் சரிபார்த்து சமீபத்தில்தான் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த ஆண்டு பிறந்தநாளை வழக்கமான பாணியில் குடும்பத்துடன் கொண்டாட உள்ளதாக ஸ்வென் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications