Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிரி நாடுகளை "அணுகுண்டு சுனாமி"யால் அடியோடு அழிக்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி- திடுக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: தங்களை எதிர்க்கும் நாடுகளின் பல நூறு கோடிக்கணக்கான மக்களை 'அணுகுண்டு சுனாமி' மூலம் பூண்டோடு இனப்படுகொலை செய்து அழிப்பதற்கான பெரும் சதித் திட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீட்டியிருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்களை ஜெர்மன் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜர்ஜென் டோடென்ஹோபெர் (Jurgen Todenhofer) என்ற பத்திரிகையாளர் கடந்த ஆண்டு வடக்கு ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தங்கியிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதக் கூடியவர் என்பதால் ஜர்ஜென் டோடென்ஹோபெருக்கு மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அனுமதி அளித்திருந்தனர்.

German Reporter Reveals ISIS Plans 'Nuclear Tsunami'

ஐ.எஸ். தீவிரவாதிகளைச் சந்தித்த அமெரிக்கா, ஜெர்மன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்த முதல் பத்திரிகையாளரும் இவரே. தற்போது 75 வயதாகும் ஜர்ஜென் டோடென்ஹோபெர் 'Inside IS Ten Days In The Islamic State' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள திடுக்கிட வைக்கும் தகவல்கள் விவரம்:

  • ஸ்கைப் வழியாக குறிப்பிட்ட சில தீவிரவாதிகளுடன் பல மாதங்களாக நான் இந்த பயணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன். இதனடிப்படையில் 10 நாட்கள் அவர்களுடன் தங்குவதற்கான அனுமதி கிடைத்தது.
German Reporter Reveals ISIS Plans 'Nuclear Tsunami'
  • மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நானும் என் மகனும் நுழைந்த உடனேயே எங்களது செல்போன்கள் வலுக்கட்டாயமாக பறித்து கொள்ளப்பட்டன.
  • இங்கிலாந்தை விட மிகப் பெரிய அளவிலான நிலப் பிரதேசத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்கின்றனர்.
  • ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கானோர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
  • நான் பார்த்தவரையில் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பு இருக்கிறது.
  • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு செயல்திட்டத்தையும் வைத்திருக்கவில்லை.
  • சிரியாவின் ரக்கா உள்ளிட்ட நகரங்களுக்கும் நான் சென்று பார்த்தேன். அவர்கள் மிகக் கொடூரமானவர்களாகத்தான் இருக்கிறார்கள்..
  • அவர்கள் வெறும் மனித தலைகளை வெட்டுபவர்கள் மட்டுல்ல.. மதத் தூய்மைவாதம் எனும் கொடூர வியூகத்தையும் வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது அதிகாரப்பூர்வ தத்துவமே.
  • இந்த உலகத்தில் தங்களுக்காக 50 கோடி பேர் மரணிக்க தயாராக இருப்பதாக நம்புகின்றனர். அவர்கள் நிச்சயம் தாங்கள் வெல்லத்தான் போகிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
German Reporter Reveals ISIS Plans 'Nuclear Tsunami'
  • இந்த உலகில் வாழும் நாத்திகர்களையும் பிற மதத்தினரையும் பூண்டோடு இனப்படுகொலை செய்வதற்கான சதித் திட்டங்களையும் அவர்கள் தீட்டியுள்ளனர்.
  • ஷியாக்கள், யாசிதிகள், இந்துக்கள், நாத்திகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்ற வெறித்தனம் அவர்களிடத்தில் இருக்கிறது.
  • மதத்தூய்மைவாதம் என்ற பெயரில் பல நூறு கோடி மக்களை அழித்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
  • ஐ.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் இந்த ஒட்டுமொத்த உலகையே கைப்பற்ற வேண்டும்; உலகம் முழுவதும் இஸ்லாமிய தேசத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் திட்டம்.
  • மனித குல வரலாற்றில் இதுவரை காண மதத்தூய்மைவாத வியூகம் இது.
  • இதற்காக ஐ.எஸ். இயக்கம் "அணுஆயுத சுனாமி" மூலம் பேரழிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
  • இவர்களை யார் தடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. நிச்சயமாக அரபு நாடுகளால்தான் இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தடுக்க முடியும். தோற்கடிக்க முடியும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+