கஞ்சாவுக்கு அனுமதி! கஞ்சா செடிகளையும் வளர்க்கலாமாம்- ஜெர்மனி திடீர் முடிவு! ஆனால் கடைசியில் ட்விஸ்ட்
பெர்லின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானது என்றால் ஜெர்மனி தான். ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட மிகப் பெரிய பொருளாதாரமாக இருப்பது ஜெர்மனி. எனவே, ஜெர்மனியில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுக்க முக்கியமானதாகப் பார்க்கப்படும்.

இதற்கிடையே ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளில் ஜெர்மனி கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அதை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. இதற்கான சட்டத்தையும் ஜெர்மனி அனுமதித்துள்ளது.
ஜெர்மனி கஞ்சா: வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத்தின்படி ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கஞ்சாவைப் புகைக்கலாம். அங்கே இனி கஞ்சாவைப் புகைப்பது, வைத்திருப்பது மற்றும் வளர்ப்பது சட்டப்பூர்வமாக்கப்படுகிறது. அதேநேரம் இதில் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கூறுகையில், "ஜெர்மனியில் கஞ்சாவுக்குச் சட்டம் இருந்தாலும் பிளாக் மார்க்கெட்டில் அதை வாங்கி பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் அதை சட்டப்பூர்வமானதாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
புது சட்டம்: அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் மருத்துவர்கள் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இந்தச் சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, பெரும் அமளி ஏற்பட்டது. இருப்பினும், அதற்கு ஆதரவாக 407 வாக்குகள் விழுந்த நிலையில், எதிராக 226 வாக்குகள் மட்டுமே விழுந்தது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், தினசரி 25 கிராம் வரை கஞ்சாவை வாங்க முடியும். மேலும், அத்துடன் வீட்டில் மூன்று கஞ்சா செடிகளையும் வைத்திருக்க முடியும். இருப்பினும், 18 வயதிற்குட்பட்ட யாரும் கஞ்சாவை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் முடியாது. மேலும், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற சில பகுதிகளில் கஞ்சா புகைப்பது இன்னும் சட்டவிரோதமானதாகவே இருக்கிறது. இன்னுமே கஞ்சாவை வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது.
கஞ்சா: முதலில் கஞ்சாவை விற்க மருந்தகங்களுக்கு உரிமம் வழங்கத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், அதனால் பிரச்சினைகள் வரலாம் என்று அஞ்சப்பட்டதால் லாப நோக்கு இல்லாத கஞ்சா சோசைட்டிகளை உருவாக்கி அதன் மூலம் கஞ்சாவை விற்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
அதேநேரம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக மாற்றும் முதல் நாடு ஜெர்மனி இல்லை. ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகள் கஞ்சாவை அனுமதிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது ஏற்கனவே மால்டா மற்றும் லக்சம்பர்க் போன்ற நாடுகள் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. நெதர்லாந்து நாட்டிலும் சமீபத்தில் தான் கஞ்சா சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, உருகுவே, ஜார்ஜியா, கனடா, மெக்சிகோ, மால்டா, லக்சம்பர்க், நெதர்லாந்து, தாய்லாந்து, போர்ச்சுகல், ஜமைக்கா, சிலி, ஈக்வடார், கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, செக் குடியரசு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, கோஸ்ட்டா ரிக்கா, பெலிஸ் உள்ளிட்ட நாடுகள் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications