11 வயது சிறுமி வயிற்றிலிருந்து 104 போதை மாத்திரைகள் அகற்றம் - தந்தை தலைமறைவு
பொகோடா: கொலம்பியாவில் போதை பொருள் கடத்தியதாக 11 வயது சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுமியின் வயிற்றிலிருந்து போதை பொருள் நிரப்பப் பட்ட 104 கேப்சூல்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக அவரது தந்தையால் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் பல கேப்சூல்கல் இருப்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றை வெளியே எடுத்த மருத்துவர்கள், கேப்சூல்களில் போதை பொருள் நிரப்பப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபர் தலைமறைவாகி விடவே, உடனடியாக, இது குறித்து போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர்.
மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் போதைப் பொருள் கடத்த முற்பட்டதாக சிறுமியைக் கைது செய்தனர். மேலும், சிறுமியின் வயிற்றிலிருந்து 104 கேப்சூல்களில், சுமார் அரைக்கிலோ அளவிலான போதைப் பொருளை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுமியின் பெற்றோர் பிரிந்து வாழ்வதாகவும், சமீபத்தில் சிறுமி தனது தந்தையை சந்தித்துள்ளார் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, மகள் மூலமாக அத்தந்தை போதை பொருளைக் கடத்த முயற்சித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளில் பாதிக்கப் பட்ட சிறுமியை அவரது தந்தை கைகளில் ஏந்தியபடி ஓடி வருவது பதிவாகியுள்ளது. பின்னர், சில நிமிடங்களில் மற்றொரு நபரிடம் கதவருகே நின்று பேசும் தந்தை, பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்று விடுகிறார்.
தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications