8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அலறலை பிற சிறுமிகளை கேட்க வைத்த ஐஎஸ்
மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவர் அலறுவதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்த கொடுமை நடந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் எதுவும் தெரியாத சிறுமிகளை கூட கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர்.
ஷரியா சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும அட்டகாசத்திற்கு அளவே இல்லை.

8 வயது சிறுமி
ஈராக்கின் மொசுல் நகரில் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை கடத்தி வந்து ஒரு கட்டிடத்தின் ஹாலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்துள்ளனர்.

மூன்று முறை
ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்னை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து தினமும் மூன்று முறை பலாத்காரம் செய்தனர் என்று அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள பெண் தெரிவித்துள்ளார்.

சத்தே இல்லாமல்
தீவிரவாதிகள் சிறுமிகள், பெண்களை தொடர்ந்து பலாத்காரம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த சிறுமிகள், பெண்கள் உடலில் தெம்பே இல்லாமல் நடை பிணம் போன்று காணப்படுவார்கள் என்கிறார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

கர்ப்பம்
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்களில் 31 ஆயிரம் பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பயிற்சி அளித்து ஒரு ராணுவத்தையே உருவாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

சிறுவர்கள்
தீவிரவாதிகள் தற்போது சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். அமைப்பின் எதிர்காலம் சிறுவர்களின் கையில் இருப்பதாக தீவிரவாதிகள் நினைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications