டிவி சீரியலால் நல்லதும் நடக்கும்... கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவிய ஜெர்மன் சீரியல்!
பெர்லின்: டிவி சீரியல் ஒன்றில் கிடைத்த ஐடியா மூலம் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியைக் கண்டு பிடித்துள்ளார் ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஒருவர்.
கடந்த 1987ம் ஆண்டு ஒருநாள் ஜெர்மனியில், ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் அளித்தனர் அவளது பெற்றோர். ஆனால், மாயமான சிறுமியின் சடலம் மட்டுமே போலீசின் கைக்கு கிடைத்தது. கொலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்காமல் போலீசார் குழம்பினார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத காரணத்தால் கிட்டத்தட்ட அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், முன்பு சிறுமி வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் எதேச்சையாக அண்மையில் டிவி யில் ஒளிபரப்பான குற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வு தொடரை பார்த்தார். நாமும் வழக்கை இதே பாணியில் விசாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, சிறுமி வழக்கை மீண்டும் தூசி தட்டினார் அதிகாரி.
அதன்படி, போலீஸ் வசமிருந்த, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடைகள் மற்றும் அதில் படிந்திருந்த கொலையாளியின் தடயங்களை சேகரித்தார். இந்த கொலையில், சந்தேகப்படும் நபர்களிடம், மரபணு சோதனையும் நடத்தப்பட்டது. அதில், 45 வயதுடைய நபரின் மரபணு ஒத்துப்போனது. இதையடுத்து, அந்த நபர், கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘1987ம் ஆண்டு, 19 வயதுடையவராக இருந்த குற்றவாளி, ஒன்பது வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அப்போது, சிறுமி, தன் பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதாக மிரட்டியதை அடுத்து, அச்சிறுமியை அவன் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications