Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஆண் நர்ஸுக்கு வாழ்க்கையிலேயே இதுதான் சிறந்த நாள்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் புற்றுநோய் பாதித்த 4 வயது சிறுமி தனக்கு விருப்பமான ஆண் நர்ஸை திருமணம் செய்து கொண்டுள்ளார். மருத்துவமனை வளாகத்திலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெலோடிஸ் சென்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயதே ஆன அப்பி சாய்லெஸ் என்ற சிறுமி ரத்த புற்று நோய்க்காக கீமோதெர்பி சிகிச்சை பெற்று வருகிறார். அப்பி சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் ஆண் நர்சாக பணி புரிந்து வருபவர் மேட் ஹிக்லிங்.

அன்பான கவனிப்பால் அப்பிக்கு மேட் ஹிக்லிங்கை மிகவும் பிடிக்கும். எனவே, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார் அப்பி. தனது ஆசையை அம்மாவிடமும் கூறியுள்ளார் அவர்.

மகளின் ஆசை...

மகளின் ஆசை...

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பியின் அம்மா, நீண்ட நாட்கள் வாழ இயலாத தனது மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ஹிக்லிங்கிடமும், அப்பியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என அவர் கேட்டுள்ளார்.

சம்மதம்...

சம்மதம்...

ஹிக்லிங் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனபோதும், இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட அவர், இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.

24 மணி நேரத்தில் திருமண ஏற்பாடு...

24 மணி நேரத்தில் திருமண ஏற்பாடு...

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த மருத்துவமனையின் டாக்டர் ஜெனிபர் பியர்சும், மற்ற நர்சுகளும் சேர்ந்து இந்த திருமணத்திற்கு 24 மணி நேரத்தில் ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.

பொம்மைக் காரில் ஊர்வலம்...

பொம்மைக் காரில் ஊர்வலம்...

4 வயதேயான அப்பிக்கு புதுப்பெண்ணுரிய வெள்ளை நிற புத்தாடையும், தலையில் அழகான திரையும் அணிவிக்கப் பட்டது. மணமகன் உடன் நடந்து வர பொம்மைக் காரில் கல்யாண ஊர்வலம் வந்தார் அப்பி.

பூக்களே பரிசாக...

பூக்களே பரிசாக...

மணமக்கள் தங்களுக்குள் மோதிரத்தை மாற்றி கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பூக்களையே பரிசாகத் தந்தனர்.

மிகச்சிறந்தநாள்...

இந்தத் திருமணம் குறித்து ஹிக்லிங் கூறும் போது, "இது எனது வாழ்நாளில் இது ஒரு சிறந்த நாள் " எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+