For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிபருக்கு எதிராக போராடிய வெனிசுலா அழகி சுட்டுக்கொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வெனிசுலா: வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அழகி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கலவரத்தை தூண்டி விட்டதாக சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் லியோ போல்டோ லோபஸ் சிறையில் அடைக்கப்பட்டார். புதன்கிழமையன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை சந்திக்க தயார் என்றும் அதிபர் மதுரோவின் சோசலிஸ்ட் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Gnesis Carmona shot in the head amid anti-government protests

இதனால் வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.நேற்று வெனிசுலாவின் வடக்கு பகுதியில் வாலென் சியா என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காராபோபோ மாகாணம் துரிஸ்மோ அழகியான 22 வயது ஜெனிசில் கர்மோனா பங்கேற்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் ஆர்ப் பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் அழகி ஜெனிசிஸ் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பலியான ஜெனிசிஸ் கடந்த 2013-ம் ஆண்டு கரபோபோ மாகாணம் துரிஸ்மோ அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அழகி ஜெனிசிஸ் சுற்றுலா பற்றிய பட்டப்படிப்பு படித்து வந்தார். அதிபருக்கு எதிரான ஆர்பாட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தார்.

English summary
A Venezuelan beauty queen lies motionless, cradled in the arms of a man on a motorbike, only to die hours later in hospital after being gunned down on the street.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X