பாக்., அணிக்கு ஆதரவு தெரிவித்த இளைஞர்.. 'பாரத் மாதா கீ ஜே' கூற வைத்த மக்கள்.. ஒரே பரபரப்பு
கடந்த மாதம் நியூசிலாந்து - பாகிஸ்தான் நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில், கோவாவுக்குச் சென்றிருந்த பிரபல யூடியூபர் ஒருவர், அங்குள்ள மக்களிடம் இந்த கிரிக்கெட் போட்டி குறித்துக் கேள்வியெழுப்பினார
பனாஜி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த இளைஞரை, பொதுமக்கள் முழங்கால் போட வைத்து 'பாரத் மாதா கீ ஜே' கோஷமிடச் செய்த சம்பவம் கோவாவில் நடந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்களே முன்வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும், அந்த வீடியோவில் இந்தியாவில் இருந்து கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவில் ஆங்காங்கே பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்படும் சம்பவங்களை நடந்து வருகிறது. கடந்த காலங்களில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்திருக்கிறது.
இதனிடையே, கடந்த மாதம் நியூசிலாந்து - பாகிஸ்தான் நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில், கோவாவுக்கு சென்றிருந்த பிரபல யூடியூபர் ஒருவர், அங்குள்ள மக்களிடம் இந்த கிரிக்கெட் போட்டி குறித்துக் கேள்வியெழுப்பினார்.
அப்போது கேலன்குட்டே பகுதியில் உள்ள ஒரு வியாபாரியிடம் அவர், "நீங்களும் நியூசிலாந்துதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், "இல்லை இல்லை.. பாகிஸ்தான் அணி தான் வெல்ல வேண்டும்" என்றார்.
அதற்கு அந்த யூடியூபர், "ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்.." எனக் கேட்க, "இது முஸ்லிம் பகுதி. நாங்கள் அப்படிதான் கூறுவோம்" என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று அந்த வியாபாரியின் கடைக்கு முன்பு இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பொதுமக்கள் பலரும் திரண்டு வந்தனர்.
பின்னர், அவரை கடுமையாகத் திட்டிய பொதுமக்கள் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரை முழங்கால் போடச் செய்து, "பாரத் மாதா கீ ஜே" கோஷம் எழுப்பச் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications