வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம்.. வலை வீசி தேடிய மக்கள்! கடைசியில் என்னாச்சு தெரியுமா?
பீஜிங்: சீனாவில் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க நகைக் கடைகளில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் அடித்து செல்லப்பட்டன. மொத்தமாக 20 கோடி தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், கடை உரிமையாளர் ஊழியர்களை வைத்து தேட சொல்லியுள்ளார். இதற்கிடையே இந்த தகவல் ஊர் மக்களும் தெரிந்து அவர்களும் தேட ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், அங்குள்ள வுக்கி கவுண்டியில் உள்ள ஒரு நகைக்கடைக்குள் இரவு முழுக்க ஊழியர்கள் கண்விழித்து நகைகளை பாதுகாத்து இருந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, வெள்ள நீர் திடீரென அடித்து வந்ததில் கடையில் இருந்தத தங்கம், வெள்ளி நகைகளை அடித்து சென்றுவிட்டதாம்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நகைகள்
இதனால், அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் தனது ஊழியர்களை விட்டு தேடி எடுத்து வருமாறு கூறியிருக்கிறார். இந்த தகவல் அங்குள்ள மக்களுக்கும் காட்டுத்தீ போல பரவியது. இதனால், இந்த மீட்புப் பணியில் அப்பகுதி மக்கள், கடை ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் இணைந்து ஈடுபட்டனர். ஜூலை 25 அன்று நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம், லாஃபெங்ஸியாங் என்ற நகைக்கடையில் நடந்துள்ளது.
உரிமையாளர் யே கூறுகையில், நகைகளைக் காப்பதற்காக ஊழியர்கள் இரவில் தங்கியிருந்ததாகவும், நகைகளை பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு மாற்றவில்லை என்றார். அன்று காலை வெள்ள அபாய எச்சரிக்கைகள் வெளியானபோது, கடைக்குள் இருந்த அனைத்து நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சில நிமிடங்களிலேயே, வெள்ள நீர் கடைக்குள் புகுந்து ஒரு மீட்டருக்கும் மேல் உயர்ந்தது.
ரூ.12 கோடி நகைகள் மாயம்
இதனால், நகைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தின் போது ஏற்பட்ட மின் தடங்கல் காரணமாக கடையின் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. இதனால், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்படவில்லை. தங்கம், வெள்ளி நகைகள் மட்டுமல்லாது, வைரம் மற்றும் மரகத கற்கள் பதித்த மோதிரங்கள், நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், பதக்கங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் உட்பட பல பொருட்கள் காணாமல் போயுள்ளன.
மேலும், புதிய கையிருப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு ரொக்கம் இருந்த கடையின் பாதுகாப்புப் பெட்டகமும் காணாமல் போனது. தற்போதைய சந்தை நிலவரப்படி, அடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 மில்லியன் யுவானுக்கு (சுமார் ரூபாய் 12 கோடி) மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சேற்றில் தேடிய ஊர் மக்கள்
வெள்ளத்திற்குப் பிறகு, யேவின் மகன் சியாயே, குடும்பத்தினர் மற்றும் கடை ஊழியர்கள் இரண்டு நாட்கள் அப்பகுதியில் தேடி சுமார் 1 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். இந்தச் செய்தி பரவியதும், அங்குள்ள மக்கள் காணாமல் போன பொருட்களைத் தேடி அப்பகுதிக்கு விரைந்தனர். சில உள்ளூர்வாசிகள் தாங்கள் கண்டெடுத்த பொருட்களை கடைக்குத் திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஒரு கிலோ நகைகள் மட்டுமே மீட்பு
சிலர் மெட்டல் டிடெக்டர் கொண்டு வந்து தங்கத்தை தேடிபார்த்ததுதான் பெரிய ட்விஸ்ட். வெள்ள பாதிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி இயங்காததால், நகைகள் எவ்வாறு அடித்துச் செல்லப்பட்டன அல்லது யார் அவற்றைக் கண்டெடுத்து எடுத்துச் சென்றார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று நகைகடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது வரை ஒரு கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை மட்டுமே மீட்க முடிந்தது எனவும், நகையை எடுத்துவிட்டு திருப்பி கொடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ள கடை உரிமையாளர் வெள்ளத்தில் போன தங்கத்தை எண்ணி தீராக்கவலையில் மூழ்கிவிட்டாராம்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications