சிகரெட் பெட்டியில் தங்க புதையல்.. 50+ ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்த ரூ.851 கோடி ரகசியம் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சுமார் 50 ஆண்டுகளாக நிலத்திற்கு அடியில் புதைந்து கிடந்த அரிய தங்க நாணயங்களின் கலெக்ஷன் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதன் மதிப்பு இப்போது $100 மில்லியன் டாலர், அதாவது 851 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. டிராவலர் கலெக்ஷன் எனக் குறிப்பிடப்படும் இந்தப் புதையல், அரிய நாணய கலெக்ஷனையே மொத்தமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1929 அமெரிக்கப் பங்குச்சந்தையான வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை எதிர்கொண்டது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் மிகப் பெரியளவில் நஷ்டமடைந்தனர். அப்போது ஐரோப்பிய நாட்டை சேர்ந்த நாணயச் சேகரிப்பாளர் ஒருவரும் அவரது மனைவியும் அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாணயங்களைக் கண்டுபிடிக்கும் பணிகளை ஆரம்பித்தனர். இதற்காக அவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தனர். வரலாறு ரீதியாக முக்கியத்துவம் பெற்ற அழகான நாணயங்களைச் சேகரித்தனர்.

Golden Revelation 160 Million Treasure Found Underground

சிகரெட் பெட்டி

ஒவ்வொரு நாணயத்தின் வரலாற்றையும் கவனமாகப் பதிவு செய்து அதைத் தங்கள் கலெக்ஷனில் சேர்த்தனர். சரியாக அப்போது தான் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நாஜி படைகள் ஐரோப்பாவுக்குள் இறங்கியது. இதனால் தனது கலெக்ஷனை பாதுகாக்க அவர் வேறு வழியின்றி ஒரு முடிவை எடுத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க காயின்களை எல்லாம் சிகரெட் பெட்டிகளில் போட்ட அவர், அதை ஒரு அலுமினிய பெட்டியில் போட்டு புதைத்துவிட்டார்.

50 ஆண்டுகள்

அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.. இதனால் அந்த சீக்ரெட் நாணய கலெக்ஷன் எங்கே இருக்கிறது என்பதும் புரியாத புதிரானது. பலரும் அதைத் தேடினாலும் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகே அந்தச் சேகரிப்பாளரின் வாரிசுகள் அந்த நாணய கலெக்ஷனை கண்டுபிடித்தனர். அதை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது அந்த நாணய கலெக்ஷன் ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 20ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிய நாணயங்கள்

இப்போது லண்டனில் உள்ள என்ஏசி அலுவலகத்தில் இந்த நாணயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்ட ஏலத்தில் சார்லஸ் II முதல் ஜார்ஜ் VI மன்னர் காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலெக்ஷனில் இருக்கும் பல நாணயங்கள் வேறு எங்குமே இல்லையாம். இதனால் இந்த கலெக்ஷன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் மிகவும் அரிதான நாணயங்களில் ஒன்று 1629ஆம் ஆண்டு ஹப்ஸ்பர்க்கை சேர்ந்த ஃபெர்டினாண்ட் III ஆட்சியில் உருவாக்கப்பட்ட 100 டக்கட் தங்க நாணயமாகும். இதன் எடை மட்டும் சுமார் 348.5 கிராம். இந்த ஒரு அரிய நாணயத்தின் மதிப்பு மட்டும் சுமார் $1.35 மில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.5 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல கோடி மதிப்பு

அதேபோல 1621ல் உருவாக்கப்பட்ட போலந்து மன்னர் சிகிஸ்மண்ட் IIIஇன் 70 டக்கட் தங்க நாணயமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 243 கிராம் எடை கொண்ட இதன் தற்போதைய மதிப்பு $471,700 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆகா முகமது கான் கஜாரால் தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹானில் அச்சிடப்பட்ட ஐந்து டோமன்களின் அரிதான தொகுப்பும் இதில் இருக்கிறது. உலகிலேயே வெறும் 5 செட்கள் மட்டுமே இவை இருப்பதால் இதுவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகின் 100க்கும் மேற்பட்ட பிராந்தியங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட நாணயங்கள் இந்த கலெக்ஷனில் இடம் பெற்றுள்ளது. பண்டைய நாகரிகங்கள் முதல் நவீன நாகரிகம் வரை பல கலெக்ஷன்கள் இதில் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதில் உள்ள பெரும்பாலான நாணயங்கள் டாப் தரத்தில் இருக்கிறது. இதில் பல நாணயங்கள் இதுவரை யாருமே பார்த்தது கூட இல்லையாம். இதன் ஒட்டுமொத்த மதிப்பு 851 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது

பல சாதனைகள் கன்பார்ம்

மேலும், நாணயத்தைச் சேகரிக்கும் போதே அதன் விரிவான வரலாற்றை அவர் குறிப்பிட்டு வைத்திருந்ததால் அதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் இந்த நாணய கலெக்ஷன் ஏலத்திற்கு வரும் நிலையில், அது பல முக்கிய சாதனைகளைப் படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+