சூப்பர்ல.. "ஒரு குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமாம்".. வேற வழியேயில்லை போல.. என்னாச்சுன்னு பாருங்க

ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் 3 லட்சம் வழங்குவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் 3 லட்சம் தருகிறார்களாம்.. ஜப்பான் அரசுதான் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக அளவில், மக்கள் தொகை பெரும்பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.. பல நாடுகளில் சுமார் 15-20 வருடங்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவாக, இப்போது பிறப்பு இறப்பு விகிதாச்சாரத்தில் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்..

Good news and Rs 3 lakh subsidy for couples birth children in japan

இதில் முதன்மையாக உள்ளது சீனா.. சீனாவில் 20 வருடங்களுக்கு முன்பேசூய, மக்கள்தொகை கட்டுப்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது... இதன் காரணமாக அந்த நாட்டில், கடந்த சில வருடங்களாகவே, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை இளையோரை விட அதிகமாக உள்ளது... மேலும், வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையும், பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது... அதனால்தான், புதிய திட்டம் ஒன்றை அந்நாடு கொண்டு வந்துள்ளது.

கடந்த வருடங்களாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசே ஊக்கத் தொகை மானியங்களை வழங்கி வருகின்றது... சீனாவை போலவே ஜப்பானிலும் இப்போது அதே நிலை உருவாகியுள்ளது... அதாவது, ஜப்பானில் கடந்த பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வரும் அதே வேளையில் இறப்புகள் அதிகம் இருப்பதால், அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

அந்த நாட்டிலும் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது... அதாவது, கடந்தாண்டு புள்ளி விவரப்படி, ஜப்பானில் 8,11,604 பிறப்புகளும், 14,39,809 இறப்புகளும் பதிவாகியுள்ளன... அதனால்தான், பெற்றோருக்கு குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு நிதி உதவி வழங்கி ஊக்கமளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 5 லட்சம் "யென்" உதவித்தொகை அதாவது, நம்முடைய இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பை அந்நாட்டின் நிதியமைச்சர் கட்சுனோபு கட்டோ வெளியிட்டுள்ளார்.. ஏற்கனவே, பின்லாந்து, எஸ்தோனியா, இத்தாலி,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதிதாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி வரும் நிலையில், இந்த லிஸ்ட்டில் ஜப்பானும் இணைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+