கூகுள் நிறுவனத்தின் 'பிக்ஸல்' ஸ்மார்ட் போன் அறிமுகம்
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விற்பனை இந்தியாவில் அக்டோபர் 13-ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.
கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளில் இன்று முதல் கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் போன் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் வரும் 13 ஆம் தேதி முதல் இதன் விற்பனை துவக்கப்பட உள்ளது. ரூ. 57,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பிக்ஸல் போனின் சிற்ப்பு அம்சங்கள்:
டே டிரீம் வி.ஆர்., ஹெட்செட்:
டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கருவியை நேரடியாக கண்களில் மாட்டி கொண்டு டெக்னாலஜி உலகத்தை அனுபவிக்கலாம், இந்த கருவி படம், யூ-டியூப், மேப் ஸ்டீட் வியூ, 360 டிகிரி வீடியோ ஆகியவற்றிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ், எச்.பி.ஓ. குளூ ஆகிய நிறுவனங்கள் மூலம் செயலிகள் வழங்கப்பட்டு அதன் மூலம் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூகுள் ஹோம்:
கூகுள் பிக்சல் போனில் பொறுத்தப்பட்டுள்ள கூகுள் ஹோம் என்ற கருவி நமக்கு தேவையான நேரங்களில் நினைவூட்டல்களை தரும். நமக்கு தேவையான தகவல்களை ‛‛கூகுள் அசிஸ்டண்ட்'' உதவியுடன் கேட்டால் உடனடியாக அந்த தகவலை கூகுளில் தேடி உடனடியாக தகவல்களை தரும். அலாரம்கள், மற்ற கூகுள் கருவியை கையாளுதல் உள்ளிட்ட பல வேலைகளை அது செய்கிறது.
குரோம்கேஸ்ட்:
நமக்கு தேவைப்படும் போது பென்டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவியை யூ.எஸ்.பி., போர்ட்டில் மாட்டி நம் டி.வி., லேப்டாப், கம்யூட்டர்களில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.
கூகுள் போட்டோஸ்:
கூகுள் பிக்ஸல் பயன்பாட்டாளர்கள் அளவற்ற கூகுள் போட்டோஸ் பயன்பாட்டடை பெற முடியும், அளவற்ற போட்டோஸ், வீடியோஸ் ( 4k வீடியோஸ்) உட்பட பலவற்றை கூகுள் சேமித்து வைத்து கொள்ளலாம்
புளூ டூத்: வெர்சன் 4.2 புளூடூத் வசதி
பிராஸசர் : குவாட் கோர் 2*15 ஜிகா கெட்ஸ்/ 2*1.6 ஜிகோ கெட்ஸ் பிராஸசர்
ரேம்: 4 ஜி.பி., ரேம்
இயங்குதளம்: அண்ட்ராய்ட் 7.0 ( நக்கஸ்ட்ஸ்) இயங்குதளம்
கலர்: வெரி சில்வர், குவிக் பிளாக், ரியலி புளூ ஆகிய 3 கலர்கள்
2,770 அல்லது 3,450 மெகா பேட்டரிகள் இந்த போனில் உள்ளது. மேலும் விரைவாக சார்ஜ் ஏறும் டெக்னிக் பயன்படுத்தப்படுவதால் 15 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 7 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் இதில் உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications