கூகுளின் பிரான்ஸ் தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை !

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுளின் பிரான்ஸ் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கூகுள் நிறுவனம் தனது அனைத்துவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக, பொதுவாக பல்வேறு நாடுகளிலும் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் ஐரோப்பாவிலும் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது.

Google headquarter raided in Spain

இந்நிலையில், மத்திய பரிஸில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பிரான்ஸ் கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் அனைத்து விதமான ஆவணங்களையும், பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் தகவல்களையும் சோதனை செய்தனர். பிரான்சில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் கூகுள் நிறுவனம் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு வரி பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+