'ஒருநாளில் இந்தியா' படமெடுக்கலாம் வாங்க அன்புடன் அழைக்கிறது கூகுள்
கலிபோர்னியா: நாள்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிடும் கூகுள் தற்போது அருமையான ஒரு வாய்ப்பை இளைய தலைமுறையினருக்கு வழங்கி இருக்கிறது.
ஒரு நாளில் இந்தியா(India in a Day) என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் படமாக எடுத்து கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
மிகவும் புகழ்பெற்ற இயக்குனர்களான ரிட்லி ஸ்காட், அனுராக் காஷ்யப் மற்றும் ஒளிப்பதிவாளர் பால்கி ஆகியோரைக் கொண்ட ஒரு குழு இந்தப் படத்தை இயக்கவிருக்கிறது.

ஒருநாளில் இந்தியா
மொபைல் கேமரா அல்லது தரமான ஒரு கேமராவைக் கொண்டு உங்கள் ஒருநாளில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் நண்பர்களுடனான உறவுகள் மற்றும் உங்கள் சொந்த பந்தங்கள் போன்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் படமெடுத்து அனுப்பி வைக்கலாம்.ஒரு நாளில் இந்தியா(India in a Day) என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் படமாக எடுத்து கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். உங்களுக்கு இது தொடர்பான சந்தேகங்கள் எழும்பட்சத்தில் http://indiainaday.withgoogle.com என்ற தளத்தில் சென்று நீங்கள் பார்வையிடலாம்.
உங்களின் விருப்பம்
இதற்காக கூகுள் உங்களுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஒருநாளில் இந்தியா முழுவதும் நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். அவ்வளவு ஏன் உங்கள் வருத்தம், சோகம், மாற்ற விரும்பும் விஷயங்கள் போன்றவற்றை நீங்கள் படம் பிடிக்கலாம். உங்களைக் கடந்து செல்லும் எவற்றை வேண்டுமானாலும் நீங்கள் எடுக்க அனுமதித்திருக்கிறது கூகுள்.
அனைவரின் பங்களிப்பிலும்
இதில் கலந்து கொள்ளும் அனைவரின் பங்களிப்பிலும் உருவாகவிருக்கிறது ஒரு நாளில் இந்தியா திரைப்படம். கூகுள் வழங்கவிருக்கும் இந்தப் படத்தை அனுராக் காஷ்யப் மற்றும் ரிட்லி ஸ்காட் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ரிச்சி மேக்தா இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
படத்தின் சிறப்பு
நீங்கள் வெறுமனே படத்தை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டியதில்லை உங்கள் சொந்தக் குரலில் அந்தப் படத்தைப் பற்றி பேசியும் அனுப்பி வைக்கலாம். அக்டோபர் 10 ம் தேதிக்குள் இந்தத் தலைப்பிற்கான படங்கள் வந்து சேரவேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது.நீங்கள் அனுப்பும் படம் தேர்வு செய்யப்பட்டால் அந்தப் படத்தின் உதவி இயக்குனர் வரிசையில் உங்களையும் கூகுள் நிறுவனம் சேர்த்துக் கொள்ளும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications