For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012ல பிரண்ஸோட தண்ணி அடிச்ச போட்டோ... போட்டுத் தர தயாராகிறது ‘கூகுள்’

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: நாம் போன இடத்தையெல்லாம் காட்டிக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது கூகுள். இது சில பயனாளர்களிடையே பெரும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

நமது டைம்லைன் என்பது நமக்கு மட்டுமானது, ரகசியமானது, நமக்கு மட்டுமே தெரியக் கூடியதும் கூட. ஆனால் அதில் ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது கூகுள் மேப்ஸ்.

ஆனால் இதுகுறித்து பலர் டிவிட்டரில் புலம்பிக் கொண்டுள்ளனர். நமது லொகேஷன் ஹிஸ்டரியை மற்றவர்களும் பார்க்க முடியும். இது நமது தனிப்பட்ட அந்தரங்கத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பலரும் புலம்புகின்றனர்.

ஞாபகம் வருமே..

ஞாபகம் வருமே..

ஆனால் இதை கூகுள் மேப் நிறுவனத்தின் ஜெரார்ட் சான்ஸ் மறுக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாம் கடந்த முறை சென்று வந்த இடம் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்துக் கொள்வது கடினம். எனவேதான் பயனாளர்களின் வசதிக்காக அனைத்தையும் நமது டைம்லைனில் பதிவு செய்யும் வசதியே இது.

போனிலிருந்து எடுத்து...

போனிலிருந்து எடுத்து...

நாம் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் போனோம், அங்கு எங்கெல்லாம் போனோம் என்பது உள்ளிட்டவை இதில் பட்டியலிடப்பட்டிருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் பயனாளர்களின் மொபைல் போனிலிருந்து எடுக்கப்படும்.

போட்டோக்களும்...

போட்டோக்களும்...

மேலும் சம்பந்தப்பட்ட பயணங்களின்போது பயனாளர்கள் எடுத்த புகைப்படங்களும் கூட அதில் இடம் பெற்றிருக்கும். கூகுள் போட்டோஸைப் பயன்படுத்தினால் நாம் சென்ற இடங்களில் எடுத்த புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் நமது நினைவில் நாம் போய் வந்த இடங்கள் பசுமையாக நினைவில் இருக்கும்" என்கிறார்.

லொகேஷன் ஹிஸ்டரி...

லொகேஷன் ஹிஸ்டரி...

இந்த சர்வீஸை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் கூகுளில் உள்ள லொகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்ஷனுக்குள் போய் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். நாம் எப்போது வேண்டுமானாலும் அதற்குள் சென்று தேவையில்லாததை நீக்கிக் கொள்ளலாம். முழு ஹிஸ்டரியையும் கூட நீக்கிக் கொள்ளலாம்.

தற்போது இந்த வசதி டெஸ்க்டாப் மற்றும் ஆண்டிராய்ட் போன்களில் மட்டும் உள்ளது.

English summary
Google has come under fire for a controversial new service that reveals just how much it knows about you. Call Timeline, it is designed to allow users of the firm's online maps to see the places they frequent most often. Google says it will help people remember restaurants and other places they visited easily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X