கங்காரு தேசத்தில் ஈழத் தமிழர் பிரதிநிதிகளை பிராண்டிய மாஜி மத்திய அமைச்சர்
கங்காரு தேசத்துக்கு போன மாஜி மத்திய அமைச்சர் ஈழத் தமிழ் தலைவர்களை அவமதித்து பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்மூர் அரசியல் தலைவர்களுக்கு இப்போது ட்விட்டர்தான் எல்லாமும்... ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை வெளியிடுவதில் அந்த மாஜி அமைச்சருக்குதான் பிக்பாஸ் கோப்பை கிடைக்கும்.

அண்மையில் கங்காரு தேசத்துக்கு அந்த மாஜி அமைச்சர் சென்றிருக்கிறார். வெளிநாடுகளுக்கு எந்த இந்தியத் தலைவர்கள் வந்தாலும் அவர்களை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் மாஜி அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச கங்காரு தேசத்து ஈழத் தமிழர் பிரதிநிதிகள் சென்றிருக்கின்றனர். அப்போது நடந்த உரையாடலில், ஈழத் தமிழர்கள் இந்தியாவுடன் நேசமாக விசுவாசமாக இருக்கவே விரும்புகிறோம் என வழக்கம்போல கூறியிருக்கின்றனர்.
ஆனால் மாஜியாரோ கடுப்பில், நீங்க ஏங்க இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கனும்... நீங்க விசுவாசமாக இருக்க வேண்டியது இலங்கைக்குத்தான் என கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இருக்கும் தமிழர் தலைவர்களுடன் மட்டுமே நான் உட்பட இந்திய தலைவர்கள், அரசு தொடர்பு வைத்து கோரிக்கைகளை பரிசீலிக்கும்.
உங்களைப் போல வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச முடியாது; வேண்டுமானால் இலங்கைக்கு போய் அரசியல் செய்யுங்கள். உங்கள் கருத்துகளை நாங்களும் கேட்கிறோம் என கடுகாய் தாளித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்து திரும்பினார்களாம் பிரதிநிதிகள். இதுதான் கங்காரு தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் ஹாட்டாக ஓடும் பேச்சாக தற்போது உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications