கோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு
துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கோவிட்-19 ஊடுருவியுள்ளது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் பல நாடுகளை பாதித்துள்ள கோவிட் 19 தற்போது அண்டார்டிகாவிலும் ஊடுருவியுள்ளது.

லாஸ் எஸ்ட்ரில்லாஸ் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பரமாரிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்கள் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர்களுக்கு தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அண்டார்டிகா சென்ற கடற்படைக் கப்பலில் இருக்கும் வீரர்களுக்கு தொற்றியுள்ளதாக சிலி ராணுவத் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. சார்ஜண்ட் ஆல்டியா என்ற இந்தக் கப்பலில் கடந்த வாரம் முதலில் 3 பேருக்கு கொரோனா தொற்றியது. இதனையடுத்து 208 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications