Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா விரும்புவதாக டொனால்டு டிரம்ப் கூறியிருந்த நிலையில், 'அமெரிக்கா ஆக்கிரமிக்க நினைக்கும் கிரீன்லாந்தை பாதுகாக்க தயாராக இருப்பதாக' ஈரான் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தன் சொந்த நாடுகளில் ஒன்றான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா நினைக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அமைதி காத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளை கிண்டல் செய்யும் வகையில் ஈரான் அதிகாரி ஒருவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றாகவும், டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்தை விலைக்கு வாங்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் கிரீன்லாந்தை எங்களுக்கு கொடுப்பதற்கு டென்மார்க் முன்வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக பறித்துக்கொள்வோம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

Greenland Iran Says Ready to Protect Greenland Mocks US Plan to Take Control of Danish Territory

நாங்கள் பாதுகாக்க ரெடி

அமெரிக்கா கிரீன்லாந்தை விலைக்கு கேட்டதற்கு டென்மார்க் அரசு கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தது. இதேபோல் அமெரிக்காவின் இந்த செயலை பார்த்து நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் அதிர்ச்சியடைந்தன. மேலும் கிரீன்லாந்து மீது அமெரிக்க எந்தவித நடவடிக்கையினையும் எடுக்க கூடாது என்று ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டன.

வெறும் அறிக்கையோடு தான் இந்த அறிவிப்பானது முடிந்ததே தவிர அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு முயற்சியினையும் ஐரோப்பிய நாடுகள் எடுக்கவில்லை. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மென்மையான போக்கினையே கடைப்பிடித்து வந்தன. இந்த நிலையில் தான் அமெரிக்கா கைப்பற்ற நினைக்கும் கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்து இருக்கிறது.

உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை

ஐரோப்பிய நாடுகளே அமெரிக்காவை எதிர்த்து பேசாமல் அமைதி காத்து வந்த நிலையில் ஈரான் அதிகாரி ஒருவர் இப்படி பேசியிருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ஈரானின் மத்திய காவல்துறை தலைவரான அகமது ரசாடான் என்பவர் தான் இந்த கருத்தினை தெரிவித்து உள்ளார். கிண்டலாக இவர் பேசியிருந்தாலும் இவரது பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அவர் கூறுகையில், உங்கள் சொந்த நாடான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற நினைக்கும் போது கூட உங்களால் (ஐரோப்பிய நாடுகள்) எதுவும் செய்ய முடியவில்லை.. வேண்டும் என்றால் சொல்லுங்கள்.. நாங்கள் வேண்டுமானால் கிரீன்லாந்தை வந்து பாதுகாக்கிறோம். கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார். இவரது பேச்சு உலகம் முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவுக்கு ட்ஃப் கொடுக்கும் ஈரான்

ஈரானை எளிதில் அழித்துவிடலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கனவு பொய்த்துப்போனது. எளிதில் ஈரான் அடிபணிந்துவிடும் என நினைத்த டிரம்புக்கு தான் இந்த போர் பெரிய தலைவலியை கொடுத்துள்ளது என்று சொல்ல நினைக்கும் வகையில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடி அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது ஈரான்.

உலக அளவில் 20 சதவீதம் அளவுக்கு எரிவாயு வர்த்தகம் இங்கே நடந்து வருவதால் அது பல்வேறு நாடுகளை பாதித்தது. இதனால் எந்தெந்த நாடுகளிடம் எல்லாம் கடுமை காட்ட நினைத்ததோ அந்தந்த நாடுகளிடம் கெஞ்சும் அளவுக்கு நிலைமை மாறியது. இதையடுத்து உடனடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 48 மணி நேரம் கெடு விதித்து எச்சரித்து இருந்தார்.

5 நாட்கள் போர் நிறுத்தம்

ஆனால் இதற்கும் ஈரான் அடிபணியாமல், நீங்கள் தாக்கினால் நாங்கள் எதிரி நாடுகளின் கட்டமைப்புகள், ஐடி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவோம். எங்களின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், உங்களின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தது.

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் துபாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்துவிடும். ஏற்கெனவே ஹார்முஸ் ஜல்சந்தியை மூடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை போல, டிரம்பின் இந்த கோபத்தால் குடிநீர் விலையும் உயர்ந்து விடாமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் கருதும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தான் ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார் டிரம்ப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+